கொடிய மதவாத ஆட்சிக்கு எதிராக அவர்கள் தெருக்களில் உயிரை துச்சமென எண்ணி போராடினார்கள். பல பெண்களும் ஆண்களுக்கும் இஸ்லாமிய கடும்போக்கு அரசினால் கொல்லப்பட்ட்னர் சொல்லொணா வதைகளை அனுபவித்தனர் இன்னும் இருட்டு சிறைகளில் வாடுகிறனர்.
குறிப்பாக 22 வயதே நிரம்பிய மஹ்சா அமினியின் கொலையை தொடர்ந்து ஈரானிய பெண்கள் வீதிகளில் ஹிஜாப்பை நெருப்பில் போட்டு கொழுத்தியும் தலைமுடியை வெட்டி எறிந்தும் இன்னும் பலவிதமான எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டும் சுதந்திரத்திற்கான வேட்கையை பிரகடன படுத்தினர்.
.
கடுமையான ஹிஜாப் கொள்கைக்கு எதிராக கிளர்ந்தெழுந்த ஆர்ப்பாட்டங்கள் விரைவில் ஈரானியத் தலைமைக்கு எதிரான போராக நாடு முழுவதும் பரவியது.
அரசின் துப்பாக்கிகளுக்கு முகம் கொடுத்து கொண்டே முன்னேறினார்கள்
ஈரான் பெண்களின் மத அடக்கு முறைக்கான இவர்களின் போராட்டம் இன்று உலக அளவில் ஒரு சுதந்திற்கான அறைகூவலாக வளர்ந்துள்ளது
ஈரான் பெண்களின் ஹிஜாப் எதிர்ப்பு முன்னணி இன்று உலக அளவில் ஒரு விடுதலை சக்தியாக மலர்ந்துள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக