மாலைமலர் : கடந்த 2021-ம் ஆண்டில் 1,64,033 பேர் தற்கொலை செய்துள்ளனர். தற்கொலை செய்துகொண்டதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது.
புதுடெல்லி: பாராளுமன்ற மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு நலன் துறை மற்றும் மத்திய குற்ற ஆவண காப்பகம் அளித்துள்ள பதிலில் கூறியுள்ளதாவது: நாடு முழுவதும் உள்ள 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கடந்த 2021-ம் ஆண்டில் 1,64,033 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் வேலையின்மை மற்றும் பணியிலிருந்து நீக்கப்பட்டதன் மனச்சுமை காரணமாக உயிரிழக்கவில்லை என்றும் தற்கொலை செய்து கொண்டதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரை கடந்த 2021-ம் ஆண்டில் 18,925 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்தியாவில் அதிகம் பேர் தற்கொலை செய்துகொள்ளும் மாநிலங்களில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது என மத்திய அரசின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக