செவ்வாய், 27 டிசம்பர், 2022

முன்பதிவு பெட்டியை ஆக்கிரமித்த வடமாநிலத்தவர் - 1000 பேரை இறக்கிவிட்ட போலீஸ்

மாலை மலர் : சென்னை  கவுகாத்தி செல்லும் பெங்களூரு விரைவு ரெயிலில் டிக்கெட் எடுக்காமல் சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்ட வடமாநிலத்தவர் முன்பதிவு செய்திருந்த பெட்டிகளில் மூட்டையை கட்டிக்கொண்டு ஏறினர். உள்ளே ஏறிய அவர்கள் முன்பதிவு செய்தவர்களுக்கு இடம் தராமல் நெருக்கியடித்துக் கொண்டு உட்கார்ந்து அடாவடி செய்துள்ளனர்.
இதனால் பாதிக்கப்பட்ட தமிழக மாணவிகள் ரெயில்வே போலீசாருக்கு புகார் தெரிவித்தனர். இதையடுத்து திருவொற்றியூரில் ரெயில் நிறுத்தப்பட்டது. உடனே அனைத்து முன்பதிவு பெட்டிகளில் ஆய்வு மேற்கொண்டு டிக்கெட் எடுக்காமல் இருந்த சுமார் 1000 வடமாநிலத்தவர்களைக் கண்டித்து வெளியேற்றினர்.
இந்த கூட்டத்தில் பல பெண்களும் டிக்கெட் எடுக்காமல் ஒரே சீட்டில் முடங்கி பயணித்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
கீழே இறக்கிவிடப்பட்ட பயணிகள் அனைவரும் திருவொற்றியூர் ரெயில் நிலையத்தில் கூட்டமாக நின்றது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக