செவ்வாய், 1 நவம்பர், 2022

சுப்பிரமணியன் சாமிக்கு கொலை அச்சுறுத்தல்?.. மோடியும் அமித் ஷாவும் என்னை கொல்லக்கூடும் . ஹரேன் பாண்டியவை கொன்றது போல .... சு சாமி டுவீட்

குஜராத் முன்னாள் அமைச்சர் ஹரேன் பாண்டியவை கொலை செய்தது போல என்னையும் ...? மோடியும் அமித் ஷாவும் முயற்சிக்கலாம் என சு. சாமியின் கடுமையான குற்றச்சாட்டு Dr. Subramanian Swamy · I hope Modi & Shah are not planning a Haren Pandeya on me. If so I may have to alert my friends. Remember I give as good as I get. The duo have even bluffed those in the highest authority in RSS. tamil.oneindia.com  -  Noorul Ahamed Jahaber Ali  : டெல்லி: கடந்த 2003 ஆம் ஆண்டு கொல்லப்பட்ட குஜராத் முன்னாள் அமைச்சர் ஹரேன் பாண்டியாவுக்கு நடந்ததைபோல் தனக்கும் பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா ஆகியோர் திட்டமிடவில்லை என்று தான் நம்புவதாக பாஜக முன்னாள் எம்பி சுப்ரமணியன் சாமி பரபரப்பு கருத்து ட்விட்டரில் பதிவிட்டு வருகிறார்.      முன்னாள் பாஜக எம்.பியும், பாஜக மூத்த தலைவருமாக இருந்த சுப்பிரமணியன் சாமி கடந்த சில மாதங்களாகவே மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியையும், அரசையும் கடுமையாக ட்விட்டரில் விமர்சித்து வருகிறார்.
குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை விமர்சித்து தொடர்ந்து ட்விட்டரில் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து வருகிறார். இது அரசியல் அரங்கில் பெரும் விவாதப்பொருளாக மாறி வருகிறது.
மத்திய பாஜக அரசு எனக்கு பாதுகாப்பு தரலை... டெல்லி ஹைகோர்ட்டில் பாஜக சுப்பிரமணியன் சுவாமி முறையீடு மத்திய பாஜக அரசு எனக்கு பாதுகாப்பு தரலை... டெல்லி ஹைகோர்ட்டில் பாஜக சுப்பிரமணியன் சுவாமி முறையீடு

ஆசிய கோப்பை தோல்வி
கடந்த செப்டம்பர் மாதம் இந்திய அணி ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரிலிருந்து வெளியேறியது பற்றி பாஜக முன்னாள் எம்.பி. சுப்ரமணியன் சாமி ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டார். அதில், "ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் ஏற்பாட்டாளர்கள் யார்?, அதில் நாம் ஏன் மோசமாக வீழ்த்தப்பட்டோம்? கிரிக்கெட் சூதாட்டமா? அப்பாவியாக கேட்கிறேன்." என்று குறிப்பிட்டு உள்ளார்.

ஜெய்ஷா மீது அட்டாக்
ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராக இருப்பவர் ஜெய் ஷா. பிசிசிஐ செயலாளராக இருக்கும் இவர்தான் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான ஏற்பாடுகளை முன்னின்று செய்தார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகனான இவர் மீது பல்வேறு விமர்சனங்கள் உள்ள நிலையில் பெயர் குறிப்பிடாமல் இத்தகைய விமர்சனத்தை முன்வைத்து உள்ளார் சுப்பிரமணியன் சாமி.

சுப்பிரமணியன் சாமி ட்வீட்
இந்த நிலையில் இன்று ட்விட்டரில் பதிவிட்டு உள்ள சுப்பிரமணியன் சாமி, "பிரதமர் மோடியும் அமித்ஷாவும் ஹரேன் பாண்டியாபோல் என் மீது திட்டமிடவில்லை என்று நான் நம்புகிறேன். அது உண்மையென்றால் என்னுடைய நண்பர்களுக்கு நான் எச்சரிக்கை விடுக்க வேண்டும். எனக்கு என்ன கிடைக்கிறதோ, அதை திரும்பி தருவேன் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இந்த இருவர் ஆர்.எஸ்.எஸ். உயர்மட்டத்தில் இருப்பவர்களை கூட அவமானப்படுத்தி உள்ளனர்." என்று பதிவிட்டு உள்ளார்.

கேள்விக்கு பதில்
இதற்கு சுதிர்தா மிஸ்ரா என்பவர் ட்விட்டரில், "அப்படியென்றால் ஹரேன் பாண்டியா கொலையில் இரட்டையரை குற்றம்சாட்டுகிறீர்களா?" என்று கேட்க, ஹரேன் பாண்டியா பாஜகவில் இருந்து ஒதுக்கப்பட்டார் என்று சுப்பிரமணியன் சாமி பதில் கொடுத்துள்ளார்.

ரீட்வீட்
பாலாஜி என்ற நபர், "சார், பாதுகாப்பான இடத்துக்கு சென்றுவிடுங்கள். ஹரேன் பாண்டியவுக்கு என்ன நடந்தது என்பதை நாங்கள் அனைவரும் அறிவோம். உங்களுக்கு எதிரான மோடி - ஷாவின் திட்டம் இது. நீதிமன்றம் உங்களை பாதுகாக்கும் என்று நம்புகிறேன்." என்று பதிவிட்டார். இதை சுப்ரமணியன் சாமி ரீட்வீட் செய்துள்ளார்.

யார் இந்த ஹரேன் பாண்டியா?
சிறுவயதில் இருந்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இணைந்து பணியாற்றி பின்னர் பாஜகவில் இணைந்த ஹரேன் பாண்டிய அம்மாநிலத்தின் உள்துறை அமைச்சராக பணியாற்றினார். குஜராத் முன்னாள் முதலமைச்சரான கேஷுபாய் பட்டேலின் ஆதரவாளரான ஹரேன் பாண்டியா, நரேந்திர மோடி தலைமையில் தேர்தலை சந்திக்க மறுத்தார்.

ஹரேன் பாண்டியால் கொலை
2002 ஆம் ஆண்டு குஜராத் கலவரத்துக்கு பிறகு இரு தரப்பையும் அழைத்து அமைதிப்பேச்சுவார்த்தை நடத்த முயன்ற ஒரே தலைவர் இவர்தான். மோடி - அமித்ஷா இணைக்கு எதிர்கோஷ்டியாக கருதப்பட்ட ஹரேன் பாண்டியா கடந்த 2003 ஆம் ஆண்டு அஹமதாபாத்தில் சுட்டுக்கொல்லப்பட்டார். இதற்கு மோடி - அமித்ஷா காரணம் என்று ஹரேன் பாண்டியாவின் மனைவி மற்றும் ஆதரவாளர்கள் குற்றம்சாட்டி வந்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக