செவ்வாய், 1 நவம்பர், 2022

குழந்தைக்கு மவுலவி செய்த அவலம்.. ம.பி-யில் அரங்கேறிய கொடூரம் !

Maulana Madrasa girl molested

kalaignarseithigal.com  -  KL Reshma  :    இந்தியா  பச்சிளம் குழந்தைக்கு பல நாட்களாக பாலியல் வன்கொடுமை.. ஆசிரியரே செய்த அவலம்.. ம.பி-யில் அரங்கேறிய கொடூரம் !
5 வயது பள்ளி சிறுமிக்கு ஆசிரியர் பல நாட்களாக பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் மத்திய பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் கத்வா பகுதியை அடுத்துள்ள கத்வா என்ற இடத்தில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. பல்வேறு மாணவர்கள் படிக்கும் இந்த பள்ளியில் 5 வயதுடைய சிறுமியும் பயின்று வருகிறார்.
அதே பள்ளியில் மவுல்வி அப்துல் சமத் என்பவர் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.


பச்சிளம் குழந்தைக்கு பல நாட்களாக பாலியல் வன்கொடுமை.. ஆசிரியரே செய்த அவலம்.. ம.பி-யில் அரங்கேறிய கொடூரம் !
இந்த நிலையில் சுட்டியாக இருக்கும் இந்த சிறுமி கடந்த சில தினங்களாக உடல் நல கோளாறு ஏற்பட்டு சோகமாக காணப்பட்டுள்ளார். இதனால் சந்தேகமடைந்த பெற்றோர் சிறுமியிடம் விசாரித்தனர். சிறுமியோ தனது மழலை மொழியில் தனக்கு நடந்தவற்றை கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ந்த பெற்றோர் உடனடியாக இது குறித்து காவல்துறையில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் ஆசிரியர் மவுல்வி அப்துல் சமத் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த ஆசிரியர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

அதுவும் தான் பல நாட்களாக சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகவும் தனது வாக்குமூலத்தில் தெரிவித்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக