வெள்ளி, 11 நவம்பர், 2022

பாலியல் வன்முறை - இலங்கை வீரர் செய்த ஏமாற்று வேலை.. ஆஸி, பெண் பரபரப்பு வாக்குமூலம்!

tamil.mykhel.com  -  Saravanamanoj  ; இலங்கை: பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கியுள்ள இலங்கை வீரர் தனுஷ்கா குணதிலகாவுக்கு எதிராக ஆஸ்திரேலிய பெண் பரபரப்பு வாக்குமூலத்தை கொடுத்துள்ளார்.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி லீக் சுற்றிலேயே வெளியேறியது. 5 போட்டிகளில் 2 வெற்றிகளை மட்டுமே பெற்றிருந்ததால் அரையிறுதிக்கு தகுதிப்பெறாமல் சென்றது.
இந்த அதிர்ச்சியில் இருந்தே இலங்கை அணி ரசிகர்கள் மீளாத சூழலில், அந்த அணி வீரர் தனுஷ்கா குறித்து வெளியாகும் தகவல்கள் மேலும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.
பாலியல் வன்கொடுமை வழக்கு.. தனுஷ்கா குணதிலகாவுக்கு பெரும் அடி.. நீதிமன்றம், இலங்கை வாரியம் அதிரடி!! பாலியல் வன்கொடுமை வழக்கு.. தனுஷ்கா குணதிலகாவுக்கு பெரும் அடி.. நீதிமன்றம், இலங்கை வாரியம் அதிரடி!!
பாலியல் வழக்கு
இலங்கை அணியின் முன்னணி ஆல்ரவுண்டரான தனுஷ்கா காயம் காரணமாக பாதியிலேயே டி20 உலகக்கோப்பையில் இருந்து விலகினார். ஆனால் நாட்டிற்கு திரும்பாமல் ஆஸ்திரேலியாவிலேயே இருந்த அவரை போலீசார் அதிரடியாக கைது செய்தார். இதற்கு காரணம் அந்நாட்டை சேர்ந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டார் என வந்த குற்றச்சாட்டு தான்.

என்னதான் நடந்தது
ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெண்ணும் - தனுஷ்காவும் ஆன்லைன் டேட்டிங் ஆஃப் மூலம் பழகியுள்ளனர். இருவரும் கடந்த நவம்பர் 2ம் தேதி சந்தித்துக்கொண்ட போது, அப்பெண்ணின் சம்மதம் இன்றியே பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது. இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டு, பெய்லும் கொடுக்கப்படவில்லை.

வாக்குமூலம்
இந்நிலையில் அப்பெண்ணின் வாக்குமூலம் வெளியிடப்பட்டுள்ளது. அதில், முதலில் இருவரின் சம்மதத்துடன் தான் உடலுறுவு கொண்டதாகவும், ஆனால் பின்னர் பாதுகாப்பு ஏதும் இன்றி தவறாக நடந்துக்கொண்டதாக கூறியுள்ளார். இதனால் தனக்கு விருப்பமில்லை என அப்பெண் கூறியவுடனே, தனுஷ்கா அடித்து துன்புறுத்தியுள்ளார்.

வலுபெற்ற வழக்கு
அவரின் தாக்குதலுக்கு உள்ளான அப்பெண் தலையில் காயம் ஏற்பட்டு தலையில் ஸ்கேன் எடுத்துப்பார்த்துள்ளார். இதுமட்டுமல்லாமல் பாலியல் ரீதியாக பல்வேறு கொடுமைகளை தனக்கு செய்ததாகவும் அழுத்தம் திருத்தமாக கூறியிருக்கிறார். இதனால் தனுஷ்கா குணதிலகா மீதான வழக்கு மேலும் வழுப்பெற்றுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக