வியாழன், 10 நவம்பர், 2022

நடிகை பார்வதி நாயர் "எச்சில் துப்பி, அடித்து அசிங்கப்படுத்தினார்" - பணியாளர் பரபரப்பு குற்றச்சாட்டு !

மின்னம்பலம் - கலா : எச்சில் துப்பி, அடித்து அசிங்கப்படுத்தி திருட்டு பட்டம் கட்டியதாக நடிகை பார்வதி நாயர் மீது அவர் வீட்டில் வேலை பார்த்த உதவி இயக்குனர் புகார் அளித்துள்ளார்.
கடந்த அக்டோபர் மாதம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நடிகை பார்வதி நாயர் வீட்டில் இருந்து ஒன்பது லட்சம் ரூபாய் மதிப்புள்ள இரண்டு கைக்கடிகாரங்கள், ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஐபோன், ரூ. 2 லட்சம் மதிப்புள்ள லேப்டாப் திருடுபோனதாகக் கூறப்பட்டது.
இதனை வீட்டில் பணிபுரிந்து வந்த புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சுபாஷ் சந்திர போஸ் என்பவர் திருடி சென்று விட்டதாக நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் நடிகை பார்வதி நாயர் புகார் அளித்திருந்தார்.
இந்த நிலையில் சுபாஷ் சந்திர போஸ் தற்போது தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அதில் நடிகை பார்வதி நாயர் வீட்டில் பணிபுரிந்தபோது,  தன்னை அடித்து துன்புறுத்தி மன உளைச்சலுக்கு உள்ளாக்கியதாக, தன் மீது அபாண்டமான திருட்டு பட்டம் சுமத்துவதாக தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சுபாஷ் சந்திரபோஸ், “இரவு நேரங்களில் நடிகை பார்வதி நாயர் ஆண் நண்பர்களுடன்  மது விருந்து நடத்திய போது பார்த்ததால் பார்வதி நாயருக்கு என் மீது கோபம் ஏற்பட்டது.  
அதனால் தான் வெளியில் சொல்ல வாய்ப்பு இருப்பதாக கூறி அன்று முதலே என்னை அநாகரிகமாக நடத்தி வந்தார். பார்வதி நாயர் அடித்து துன்புறுத்தி என் மீது எச்சில் துப்பியதுடன், ஆட்களை வைத்தும் அடித்தார்.

கடந்த 27 ஆம் தேதி, தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் பார்வதி நாயர் மீது புகார் அளித்தபோது, என் மீதே புகார் அளிப்பாயா? என்று என்னிடம் கோபமாக பேசினார்.

மேலும் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக மீண்டும் புகார் அளிக்கவுள்ளதாக என்னிடம் கூறினார்.
நான் திருடியதாக சொல்லப்படும் எந்த பொருட்களையுமே நான் இதுவரை அவரது வீட்டில் பார்த்ததில்லை. வேண்டுமென்றே என் மீது திருட்டு பட்டம் கட்டுகிறார்.

நான் வேலை பார்த்த தயாரிப்பாளர் ஒருவர் கூறியதால் பார்வதி நாயரிடம் வேலை பார்த்தேன்.  குறிப்பாக நடிகையின் நடவடிக்கையை கண்காணிப்பதற்காகவே என்னை வேலைக்கு அமர்த்தினார்கள்.  
இந்நிலையில் அவரது ஆண் நண்பர்கள் குறித்து வெளியில் தெரிவித்துவிடுவேன் என்று தான் இது போன்று பொய் புகார் அளித்துள்ளதாக” சுபாஷ் சந்திரபோஸ் தெரிவித்துள்ளார்.

கலை.ரா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக