சனி, 5 நவம்பர், 2022

நாட்டிற்கு எதிரான கும்பலுடன் ராகுல்காந்தி நடைபயணம்- ஒன்றிய பாஜக மந்திரி அனுராக்சிங் தாக்கூர்

நாட்டிற்கு எதிரான கும்பலுடன் ராகுல்காந்தி நடைபயணம்- மத்திய மந்திரி அனுராக்சிங் தாக்கூர் புகார்


மாலை மலர்  :   அமிர்பூர்:  வரும் 12ந் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெறும் இமாச்சல் பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையல் அம்மாநிலத்தின் அமிர்பூர் நகரில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை மந்திரி அனுராக்சிங் தாக்கூர் கூறியுள்ளதாவது:
நாட்டிற்கு எதிராக கோஷம் எழுப்பிய சின்ன, சின்ன கும்பலுடன் ராகுல் காந்தி பாத யாத்திரை நடத்துகிறார். அதனால்தான் அவரது பாத யாத்திரையில் பிரியங்கா காந்தி பங்கேற்கவில்லை.
கடந்த ஐந்து ஆண்டுகளில் இமாச்சல பிரதேசத்தில் இரட்டை எஞ்சின் அரசு செயல்படுத்தி உள்ள பல நலத் திட்டங்களால் மீண்டும் இஙகு பாஜக ஆட்சிக்கு வரும்.
இமாச்சலப் பிரதேசத்தின் நலனுக்காக காங்கிரஸ் ஒருபோதும் உழைக்கவில்லை. இந்த மாநிலத்தின் அனைத்துத் துறை வளர்ச்சியையும் பாஜக உறுதி செய்துள்ளது. பாஜக வளர்ச்சியை நம்புகிறது, அதே நேரத்தில் காங்கிரஸ் பொய் சொல்லி பொதுமக்களை தவறாக வழிநடத்துகிறது. பிரதமர்மோடி தலைமையின் மீது மக்கள் மீண்டும் நம்பிக்கை வைத்து, இரட்டை எஞ்சி அரசை அமைக்க உதவுவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக