வியாழன், 17 நவம்பர், 2022

மார்வாடிகள் கைகளில் தமிழ்நாடு வர்த்தகம்?

 M S Rajagopal  :   தங்கம், தங்க நகைகள் மொத்த வியாபாரம் என்எஸ்சி போஸ் ரோடு செளகார்பேட்டை மார்வாடிகள் குஜராத்திகள் கையில் இருக்கிறது.
வைரம் நவரத்தினங்கள் மொத்த வியாபாரம் குஜராத்திகள் கையில் இருக்கிறது.
எவர்சில்வர் தகடுகள் மொத்த வியாபாரம் தேவராஜ் முதலி தெரு மார்வாடிகள் கையில் இருக்கிறது.
மருந்து வகைகள் நைனியப்ப நாய்க்கன் தெரு மார்வாடிகள் கையில் இருக்கிறது.
கெமிக்கல்கள் கோவிந்தப்ப நாய்க்கன் தெரு மார்வாடிகள் கையில் இருக்கிறது.
ஜவுளி வகைகள் கோடவுன் தெரு மார்வாடிகள் கையில் இருக்கிறது.
மின்சார சாதனங்கள் காசி செட்டித் தெரு மார்வாடிகள் கையில் இருக்கிறது.
நட் போல்ட் ஃபேசனர்ஸ் சிறு சிறு இயத்திர வகைகள் வெல்டிங் ராடுகள் போன்ற தொழிற்சாலைகளுக்குத் தேவையான ஹார்ட்வேர் பொருட்கள் பிராட்வே போரா முஸ்லிம்கள் கையில் இருக்கிறது.
மார்பிள் டைல்ஸ் பாத்ரும் ஃபிட்டிங்ஸ் சானிட்டரி வேர்கள் மார்வாடிகள் கையில் இருக்கிறது.


ஃபேன்ஸி பொருட்கள் செயற்கை மணிகள் ரத்தினங்கள் இமிட்டேஷன் நகைகள் மின்ட் தெருமார்வாடிகள் கையில் இருக்கிறது.
வாசனைப் பொருட்கள் எஸென்ஸ் போன்றவை வால்டாக்ஸ் ரோடு மார்வாடிகள் கையில் இருக்கிறது.
லாரி கார் ஆட்டோ டூலர் பைனான்ஸ் செளகார்பேட்டை மார்வாடிகள் கையில் இருக்கிறது.
வங்கி இன்சூரன்ஸ் எண்ணெய் நிறுவனங்கள் ஆகிய பொதுத்துறை நிறுவனங்களின் அதிகாரிகளில் பெரும்பாலானவர்கள் வடநாட்டவர்கள்.  
இரயில்வே பணியாளர்களில் பெரும்பாலானவர்கள் வடநாட்டவர்கள்.
ஆனால் இதையெல்லாம் எதிர்த்து  நம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்பதால்தான் வடநாட்டிலிருந்து வருகிற ஏழைக் கூலித் தொழிலாளர்களை எதிர்த்து கோஷமிட்டு கொண்டிருக்கிறோமா ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக