வியாழன், 17 நவம்பர், 2022

14 ராமேஸ்வரம் மீனவர்கள் நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையால் கைது ..

tamil.samayam.com  :  ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 14 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆழ்கடலில் மீன் பிடிக்கும் இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
எல்லை தாண்டி வந்ததாகக் கூறி மீனவர்களின் வலைகளை சேதப்படுத்தி, மீன்களை எடுத்துக் கொண்டு அவர்களை விரட்டி அடிப்பதும், விசைப்படகுகளுடன் மீனவர்களை சிறை பிடிப்பதும் வாடிக்கையாகவே இருந்து வருகிறது.
இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கும்படி, மத்திய அரசிடம், தமிழக அரசு சார்பில் பல முறை கடிதம் வாயிலாகவும், நேரடியாகவோ வலியுறுத்தப்பட்டு விட்டது.
எனினும், இலங்கை கடற்படையின் அத்துமீறல் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.
இந்நிலையில், இலங்கையின் நெடுந்தீவு அருகே 14 தமிழக மீனவர்களை இன்று இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. அவர்களின் ஒரு படகையும் பறிமுதல் செய்துள்ளது. எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக அவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை காரை நகர் கடற்படை முகாமிற்கு கொண்டு சென்று இலங்கை கடற்படை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக