புதன், 2 நவம்பர், 2022

பாஜக அண்ணாமலை கைது

நக்கீரன் : அண்மையில் திமுக பேச்சாளர் சைதை சாதிக் பாஜக பெண் நிர்வாகிகள் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.
இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்து வந்த நிலையில், இதுதொடர்பாக பாஜக  சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பாஜக மகளிர் அணி சார்பில் புகாரும் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுக பேச்சாளரின் கருத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பாஜக  மகளிர் அணி சார்பில் போராட்டம் நடைபெற்றது.
இதில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்ட நிலையில், அனுமதி பெறாமல் போராட்டம் நடத்தியதாக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் அங்கு போராட்டம் நடத்திய பாஜக மகளிர் அணி நிர்வாகிகள் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக