வெள்ளி, 11 நவம்பர், 2022

கனமழை எதிரொலி… 10 மாவட்டங்களின் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!!

tamil.asianetnews.com -  Narendran S  :  கனமழை காரணமாக சென்னை உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக சென்னை உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் கனமழை பெய்து வருகிறது.
இதையும் படிங்க: தமிழகம் வரும் பிரதமர் மோடியை உற்சாகமாக வரவேற்போம்… அண்ணாமலை அறிவுறுத்தல்!!
அன்மையில் பெய்த மழையால் சாலைகளில் வெள்ள நீர் தேங்கியதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனிடையே கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று (11.11.2022) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், வேலூர், திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக