திங்கள், 31 அக்டோபர், 2022

சோயா பால் (சோயா Torfu / பாலாடை / பன்னீர்) செய்வது எப்படி? செயல் முறை விளக்கம்

 namkural.com    Ambika Saravanan:  சோயா பாலின் நன்மைகள்.  
சோயா பீன்ஸ் பல சோயா பொருட்கள் செய்ய ஆதாரமாக இருக்கின்றது. அவைகள் அனைத்துமே நமது அன்றாட உணவில் பயன் படுத்தப்படுகின்றன.
சோயாவின் தொடக்கம் சீனாவில் தான் ஆரம்பித்தது. அதன் பிறகு தற்பொழுது உலகில் எல்லா இடங்களிலும் சோயா பொருட்கள் கிடைக்கின்றன. சைவ உணவை விரும்பி உண்ணுகிறவர்களுக்கு , சோயா உணவுகள் புரத சத்துக்கு ஒரு சிறந்த மாற்று. சோயா பால் ஆசிய உணவுகளில் அதிகமாக பயன் படுத்தப்படுகின்றது. சோயா பால்,  சீஸுக்கு மாற்றாக தயாரிக்கப்படும்  டோஃபுவில் (Tofu) பயன்படுத்தப்படுகிறது. இதில்  உள்ள பல விதமான நன்மைகளை இப்போது பார்க்கலாம்.

பாலுக்கு ஒரு சிறந்த மாற்றாக இருப்பதால் அனைவரும் சோயா பாலை விரும்பி பயன்படுத்துகின்றனர். இது வெனிலா, சாக்லேட் என்று பலவிதமான பிளேவரில் கிடைக்கின்றன. உப்பு சுவையுடன் கூடிய சோயா பால் சீனா  மற்றும் இந்தியாவில் விற்கப்படுகின்றன.



பால் பொருட்கள் மற்றும் இறைச்சியை சாப்பிடாதவர்களுக்கு சோயா பால் ஒரு ஊட்டச்சத்தான மாற்று. விலை மலிவாக கிடைப்பதாலும், எல்லா இடங்களிலும் கிடைக்கும் ஒரு பொருளாக இருப்பத்தாலும், இந்த பொருளின் இன்னும் அதிகமான பலன்களை பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

சோயா பாலின் ஊட்டச்சத்துகள்:
சோயா பால் சிறந்த ஆற்றல் பெற உதவுகிறது. புரதசத்து, நார்ச்சத்து, சர்க்கரை, கொழுப்புசத்து போன்றவை அதிகமாக இருக்கிறது. தாது பொருட்களில் கால்சியம், இரும்பு, மெக்னீசியம்,பாஸ்போரோஸ் , பொட்டாசியம், சோடியம், துத்தநாகம் போன்றவை உள்ளன. வைட்டமின்களில் போலேட், தியாமின் ,ரிபோபிளவின், நியாசின், வைட்டமின் பி12 , வைட்டமின் டி , வைட்டமின் கே , வைட்டமின் ஈ போன்றவை சோயா பாலில் காணப்படுகின்றன. இந்த ஊட்டச்சத்துகள் நிறைந்த சோயா பால் உடல் நலத்தை அதிகரிக்கிறது.

வலுவூட்டப்பட்ட சோயா பாலின் ஊட்டச்சத்துகள்:
பசுவின் பாலும் சோயா பாலும் புரத சத்தில் ஒரே அளவை தான் கொண்டிருக்கின்றன. மற்ற ஊட்டச்சத்துகள் பசுவின் பாலை விட குறைந்தே காணப்படுகிறது. ஆகையால் அதனை அதிகரிப்பதற்கு சோயா  பால் வலுவூட்டப்படுகிறது . இதனால், இந்த பால் பசுவின் பாலை ஓத்த ஊட்டச்சத்தை அடைகிறது. மற்ற வகை பால் பொருட்களில் அலர்ஜி  உள்ளவர்கள் சோயா பாலை அருந்தலாம்.

ஆரோக்கிய பலன்கள்:
இப்போது சோயா பாலின் ஆரோக்கிய பலன்களை பார்க்கலாம்.
1. இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது:
சோயா பாலில் உள்ள புரத சத்து மனித உடலின் வளர்ச்சிக்கு மிகவும் அவசியம். புரத சத்தில் உள்ள அமினோ அமிலங்கள் உடல் நலக் கோளாறு ஏற்படும் போது அதனை சீரமைக்க பல நன்மைகளை செய்கின்றது . அமினோ அமிலங்கள் மற்றும் ஐசோபிளவோன்ஸ் ஆகியவை கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவுகின்றன . இது ஆய்வுபூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது .டைப் 2 நீரிழிவு நோயாளிகள் சோயா பாலை அருந்துவதால் அவர்கள் இரத்த அழுத்தம் சீராகிறது. இதனால் இது இதய ஆரோக்கியத்தை சீராக்குகிறது.

2. மெனோபாஸ் காலகட்டம்:
மெனோபாஸுக்கு பிறகு பெண்களுக்கு , ஈஸ்ட்ரோஜென் சுரப்பது குறைகிறது. அதனால் ஏற்படும் உடல் உபாதைகளை சோயா உணவுகளின் உட்கொள்ளல் தடுக்கிறது. சோயா உட்கொள்வதன் மூலம்  எலும்பு பலத்தை அதிகரித்து எலும்பு முறிவு அபாயத்தை குறைக்க, சோயா பாலில் உள்ள , சோயா ஐசோபிளவோன்ஸ் உதவுகிறது.

3. புற்று நோயைத் தடுக்கிறது:
சோயா பாலை அதிகம் உட்கொள்வதன் மூலம் ஆண்மை சுரப்பி புற்று நோய் தடுக்கப்படுகிறது. சோயா பாலை அதிகம் உட்கொள்ளும் ஆண்களுக்கு இந்த நோயின் பாதிப்புகள் தடுக்க படுகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. மார்பக புற்று நோய் பெண்களை பரவலாக தாக்குகின்றது. மெனோபாஸ் கால கட்டத்திற்கு  பிறகு, அதிகமான சோயா பாலை எடுத்து கொள்வதால், சோயா பால் ஈஸ்ட்ரோஜனுக்கு ஒரு மாற்றாக இருப்பதால் மார்பக புற்று நோய் தவிர்க்கப் படுகிறது.

4. ஆன்டிஆக்ஸிடண்ட்டாக செயல்படுகிறது:
சோயா பாலில் உள்ள சோயா ஐசோபிளவோன்ஸ் சிறந்த ஆன்டிஆக்சிடண்டாக செயல்படுகிறது. ஆகையால் நாட்பட்ட வியாதிகள் குணமாகிறது. Tofu வை உண்பதால்  ஆக்ஸிஜனேற்ற மன அழுத்தம் குறைகிறது. இந்த ஆக்ஸிஜென்ட்ற்ற  மன அழுத்தத்தால் கல்லீரல் சேதமடையும் வாய்ப்புகள் ஏற்படும். Tofu வில் இருக்கு கல்லீரல்  சேதத்தை தடுக்கும் தன்மையால் இந்த நோய் தவிர்க்க படுகிறது .  

5. உடல் பருமனை கட்டுப்படுத்தி  கொலஸ்ட்ராலை குறைக்கிறது:
வளர்சிதை மாற்றத்தால் ஆண்களுக்கும் , மெனோபாஸ் காலத்திற்கு பிறகு பெண்களுக்கு இயல்பாகவே உடல் பருமன் ஏற்படுகிறது. சோயா உணவை எடுத்துக் கொள்வதால் இந்த தொல்லை தீர்க்கப்படுகிறது.  சோயாவில் உள்ள ஐசோபிளவோன்ஸ் கொழுப்பிணியாக்கத்தை தடை செய்து, கொழுப்பு திசுக்கள் வளர்ச்சியை குறைக்கிறது. ஆகவே சோயா பால் மற்றும் சோயா உணவுகளை உண்பதால் கொலஸ்ட்ரால் கட்டுப்பட்டு, உடல் பருமன் சீராகி, சீரான இதய ஆரோக்கியத்தை கொடுக்கிறது. உடல் பருமனால் , இடுப்பின் அளவு அதிகரித்து காணப்படுபவர்கள் சோயா பாலை அருந்தி இடுப்பின் அளவை குறைக்கலாம்.

சோயாவில் உள்ள தாவர ஊட்டச்சத்துகள் , பலவிதமான நன்மைகளை உடலுக்கு செய்கின்றன. சோயா பாலை உட்கொண்டு நல்ல உடல் ஆரோக்கியத்தை பெறுவோம்.


pasumaiindhiya.com  : சோயா பால் தயாரித்தல்  :-      சோயா பாலை எந்த விதமான கெமிக்கல் இல்லாமல் இயற்கையான எளிய முறையில் மதிப்பு கூட்டும் முயற்சியால் மூன்று மாதம் கெடாமல் வைத்திருந்து இந்த சோயா பாலிலிருந்து பாதாம்பால் தயாரித்து விற்பனை செய்தால் லாபம் அடையலாம்.
    பச்சை சோயா பீன்ஸில் உள்ள சிவப்பு விதையிலிருந்து சோயா பால் எளிதில் தயாரிக்கலாம். சோயா பால் தயாரிப்பதன் மூலம் நிறைய வருமானமும் அந்த பாலின் விதையின் கழிவிலிருந்து உணவுக்கு தேவையான பொருட்களும் தயாரிக்கலாம். அதிலிருந்து டிரை சோயாபீன்ஸ் தயாரித்து நாமே சொந்தமாக கடைக்கு சந்தைப்படுத்தினால் வியாபாரத்தை அபிவிருத்தி செய்யலாம். சோயா பாலில் சர்க்கரை, எசன்ஸ், சிறிது சமையலுக்கு பயன்படும் உப்பு சேர்த்து சுவையான பாதாம்பால் தயாரிக்கலாம். சோயா பீன்ஸிலிருந்து மூன்று விதமாக சோயாபால் எடுக்கலாம்.
    சிவப்பு சோயா பால் விதையில் தோல் உரிக்காமல் அப்படியே பால் எடுக்கலாம். இனால் அதன் நிறம் இளம் எதா நிறத்தில் இருக்கும்.
    சோயா விதையில் அதன் தோலை நீக்கி அதன் வெள்ளைநிற சோயா விதையிலிருந்து பால் எடுத்தோமானால் சோயா பால் வெள்ளையாக இருக.கும்.
    மளிகை கடைகளில் விற்கும் சோயா பீன்ஸ் டிரை சோயா பீன்ஸ் ஆகும். வாங்கி வந்த சோயா பருப்பை நன்றாக கழுவி 8 மணி நேரம் ஊற வைத்து மறுபடியும் சோயா பருப்பை கழுவி சுத்தம் செய்து அதிலிருந்து சோயா பால் தயாரிக்கலாம். இதன் சுவையும், மணமும், நிறமும் சற்று மாறுதலாக இருக்கும். சோயா பால் தயாரிப்பதற்கு இயந்திரம் உள்ளது. இந்த இயந்திரத்தின் பெயர் சோயா டைரக்ட் என்பதாகும். இதன் மூலம் குறைவான பாலை உற்பத்தி செய்ய முடியும். ஆட்டோமெடிக் இயந்திரம் உள்ளது. ஒவ்வொரு பிராண்டைப் பொறுத்து அதன் கொள்ளளவு பொறுத்து விலை இருக்கும். 3 லட்சம் முதல் கிடைக்கும்.
    மாட்டு பாலுக்கு மாற்றாக பயன்படுத்தி சோயா பாலிலிருந்து பத்து வகையான உணவு தயாரிக்கலாம். 1. பாதாம்பால். 2. பிஸ்தா மில்க். 3. ஏலக்காய் மில்க் 4. ரோஸ் மில்க். 5. ஸ்ட்ராபெரி மில்க். 8. ஜிகர்தண்டா மில்க். 9. சாக்லேட் மில்க். 10. காபி மில்க் ஆகியவை தயாரிக்கலாம். சோயா பாலிலிருந்து எளிய முறையில் வீட்டிலிருந்தபடியே சிறு தொழிலாக அமைத்து பெரிய தொழிலாக மாற்றி அதிக லாபம் அடையலாம்.
    இந்த சோயா பீன்ஸ் விதையிலிருந்து பால் எடுத்தபிறகு அதன் கழிவு சத்தான உணவு ஆகும். இதற்கு ஒகாரா என்று பெயர். இதில் அதிகமாக நார்சத்து உள்ளது. இந்த ஒகாரா மாற்று உணவுப் பொருட்களுடன் பிஸ்கட், கோதுமை மாவு, மற்ற தானிய உணவுடன் சேர்த்துக் கொண்டால் உடல் நலத்திற்கு ஆரோக்கியமாக இருக்கும்.
    இந்த சோயாபால் தரமான மாட்டு பாலில் உள்ள சத்துக்களைவிட அதிக சத்துக்கள் கொண்டது. இந்த சோயா பாலில் எனர்ஜி, புரோட்டின், கொழுப்பு, கார்போ ஹைட்ரேட், கால்சியம், நார்ச்சத்து, இரும்புச்சத்து சோடியம் உள்ளது. இதைப் போல் 30க்கும் மேற்பட்ட வைட்டமின்கள் உள்ளன. இந்த சோயாபாலை தினமும் அருந்தினால் கொலஸ்டிரால் அளவு குறைந்துவிடும். இதயம் மற்றும் சிறுநீரகம் நல்ல ஆரோக்கியமாக செயல்படும். உடலில் கேன்சர் செல் வராமல் தடுக்கும். மூளையõன் ஞாபகசக்தி அதிகரிக்கும். மெல்லிய தேகம் உள்ளவர்கள் சோயாபால் அருந்தினால் உடல் வலுப்பெறும். உடலில் சர்க்கரை அளவு கட்டுப்பட்டு குறைந்துவிடும்.
    உடலில் சீக்கிரம் செரிமானமாகும். நார்ச்சத்து அதிகம் உள்ளதால் குடலுக்கு ஏற்ற உணவாகும். சோயாபாலிலிருந்து பாதாம்பால் தயாரிக்க சிறிய பாதாம்பால் பாட்டில் தேவைப்படும். இந்த பாதாம்பால் பாட்டிலில் பத்து வகையான நறுமண பால் வீட்டிலிருந்தபடியே சிறு தொழிலாக குறைந்த முதலீட்டில் செய்யலாம். ஒரு பாதாம்பால் தயாரிப்பு செலவு ரூ.5/- அடக்கவிலை. அதன் பாட்டிலின் மேல் லேபிளிலில் கம்பெனி பெயர், எக்ஸ்பைரி டேட், எம்.இர்.பி ரேட் ரூ.15/ என்று அச்சிட்டு கடைக்கு பாட்டிலில் ரூ..10/ க்கு விற்பனை செய்யலாம்.
    குறைந்தது ஒரு நாளுக்கு 100 பாட்டில் விற்பனை செய்தோமானால் நமக்கு மாதத்திற்கு செலவு போக ரூ.15,000/ லாபம் கிடைக்கும். வீட்டில் உள்ள இரண்டு நபர்கள் தேவைப்படும். நம் வீட்டில் உள்ள அறையே போதுமானதாகும். மாட்டுப்பால், சோயாபால் இந்த இரண்டு வகையான பாலில் நாம் எந்தவிதமான கெமிக்கல் கலந்தாலும் இரண்டு பாலும் கெட்டுவிடும். அதாவது பென்சாயிக் ஆசிட் மற்றும் பிரிசர்வேட்டிவ் கிளாஸ் 2 கெமிக்கல் கலக்கக்கூடாது. பாதாம்பால் ஏஜென்ஸி எடுத்து செய்பவர்கள், ரஸ்னா, மோர் தயாரித்து விற்பனை செய்பவர்கள், சோடா கலர் கம்பெனி நடத்துபவர்கள் மற்றும் சாக்லேட், பிஸ்கட், தண்ணீர் பாக்கெட் விற்பனை செய்பவர்கள் அனைத்து ஏஜென்ஸி எடுப்பவர்கள் வீட்டிலிருந்தபடியே சோயாபால் தயாரித்து எளிய முறையில் அதிகமாக சம்பாதிக்கலாம். இதனை கையில் எளிய முறையில் தயாரித்தாலும் இயந்திரத்தின் உதவியுடன் தயாரித்தாலும் மிகவும் முக்கியம் சந்தைப்படுத்துதல் தான். இயற்கை அங்காடி, இஞ்ஜினியரிங் காலேஜ் கேன்டீன், சூப்பர் மார்க்கெட், பள்ளி கேன்டீன் இவற்றின் மூலம் வியாபாரத்தை அதிகப்படுத்தி லாபம் கூடுதலாக சம்பாதித்து வாழ்க்கை தரத்தை சொந்த தொழில் மூலம் உயர்த்திக் கொள்ளலாம்
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக