திங்கள், 31 அக்டோபர், 2022

. 1710ல் இராமநாதபுர மன்னர் சேதுபதியோடு உடன் கட்டை ஏறிய 47 மனைவிமார் கிறிஸ்தவ பாதிரியார்களின் குறிப்பு

எரியும் நெருப்பையும் வேலையாட்களையும் மாறி மாறிப் பார்த்துவிட்டு சிவ சிவா என்று கத்திவிட்டு முன்னவரைப் போன்று தைரியமாக எரியும் நெருப்பிற்குள் குதித்தார். பின்னர் வரிசையாக மற்ற பெண்கள் குதித்தனர். சிலர் தைரியமாகவும் சிலர் ஒன்றும் புரியாத பித்தம் பிடித்தவர் போன்றும் வந்தனர். மற்றவர்களைவிடப் பலவீனமான தைரியம் குறைவான ஒரே ஒரு பெண் மட்டும் அருகில் இருந்த கிறிஸ்தவ சிப்பாயிடம் ஓடி, தன்னைக் காப்பாற்ற கெஞ்சினார். இது போன்ற காட்டு மிராண்டித்தனமான சடங்குகளுக்குத் துணை இருக்கக்கூடாது. கடுமையாகத் தடை விதிக்கப்பட்டிருந்தும் இந்த சிப்பாய் இங்கு வந்திருந்தார். இந்தக் காட்டுமிராண்டித்தனமான செயல்களைக் கண்டு பதறியதால் என்ன செய்வது என்று புரியாமல் அந்தப் பெண்ணை அந்த சிப்பாய் தள்ளிவிட்டதால் அவள் நிலை தடுமாறி தலைகுப்புற எரியும் குழிக்குள் விழுந்தாள்

 குமரேசன் சி செ :  தமிழ்பெண்ணியம்  இந்துபெண்ணியம்!
நூறு புனைவு இலக்கியத்தால் கடத்த முடியாத தமிழக பெண்களின் துன்ப வாழ்வியலை இரண்டு பக்க வரலாற்று குறிப்பு நிகழ்த்துகிறது..
தமிழ் இந்து பெண்களின்
கண்ணீர் கட்டுடைந்தபோது
அனுபவித்த
வலிமிகு வரலாற்றை
வாசிப்பவர்களின் விழிநீரும்
வழிந்தோடும் ..
உலகுக்கே நாகரிகம் கற்றுக்கொடுத்த தமிழ்-இந்து பண்பாட்டின் இருண்ட பக்கங்கள்
பதினெட்டாம், பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில்
கிபி. 1710ல் இராமநாதபுரம் பகுதியினை ஆண்டு வந்த கிழவன் சேதுபதி இறந்தபோது அவனது நாற்பத்தியேழு மனைவியரும் உடன் கட்டை ஏறியதாக யேசு சபைப் பாதிரியார்கள் எழுதி யுள்ளனர். அப்பகுதி வருமாறு:
மறவ நாட்டின் வயதான மன்னர் 1710இல் மரணமடைந்தார். அவருடைய உடலுடன் அவருடைய மனைவியர் (47 பேர்) தங்களையும் எரித்து மாய்த்துக் கொண்ட சதி என்ற சடங்கு நடைபெற்றதாலும் அவருடைய மரணம் குறிப்பிடப்பட வேண்டிய ஒன்றாகும். 

இராமநாதபுரத்தில் இருந்து சிறிது தொலைவில் ஒரு பெரிய ஆழமான குழி வெட்டப்பட்டு, கிட்டதட்ட முழுவதும் கட்டைகளால் அது நிரப்பப்பட்டி ருந்தது. உடைகளாலும் நகைகளாலும் அலங்கரிக்கப்பட்ட இறந்த அரசரின் உடல் அதன்மேல் கிடத்தப்பட்டது. பிராமணர்கள் பல்வேறு சடங்குகளை நிறைவேற்றியபின், அடியில் இருந்து கட்டைகளுக்கு நெருப்பு வைக்கப்பட்டது. அடிப்பகுதியில் தீ நன்றாக எரிய ஆரம்பித்ததும் பாவப்பட்ட அந்த பெண்களின் கூட்டம் அவர்கள் பலியிடப்படும் அந்தக் குழியை நெருங்கி அதனை வரிசையாகச் சுற்றி வந்தனர். அவர்கள் உச்சந்தலையில் இருந்து கால்வரை அழகாக நகை களாலும் மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தார்கள்.
 

சிறிது நேரத்திற்கு பின்னர் இறந்த மன்னரின் முதல் ராணி வாளைக் கையில் எடுத்து 'நம் மன்னர் தன் எதிரிகளை வீழ்த்திய இந்த வாளைப் பார். இதை வேறு எதற்கும், உன்னுடைய மக்களின் இரத்தத்தைச் சிந்துவதற்கும் பயன் படுத்தாதே. 

ஒரு தகப்பனைப் போல் அவர் ஆட்சி செய்ததைப் போல் நீயும் ஆட்சி செய்தால் நீயும் அவரைப் போல் பல ஆண்டுகள் வாழ்வாய். அவர் இல்லாததால் எனக்கோ இந்த உலகில் வேறு ஏதும் இல்லை. அவர் சென்றுள்ள இடத்திற்கு நானும் செல்கிறேன் என்று மன்னரின் வாரிசிடம் கூறி புதிய அரசரின் கையில் அந்த  வாளை வைத்தார்.

 புதிய மன்னரும் எந்தச் சலனமும் இல்லாமல் பெற்றுக் கொண்டார். பின்னர் மகிழ்ச்சியான மனித வாழ்வின் உணர்ச்சியையும் வெளிப்படுத்தாமல் அதைப் முடிவைப் பார்.  நரகத்திற்குள் குதிப்பது போல் நான் உணர்கிறேன் என்று கூறி உரத்த கூக்குரலுடன் கடவுள்களின் பெயர்களை உச்சரித்துக் கொண்டு நெருப்பிற்குள் தைரியமாகக் குதித்தார்.
 

இரண்டாவது இராணி புதுக்கோட்டை மன்னர் தொண்டைமானின் சகோதரி. புதுக்கோட்டை மன்னரும் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். தன்னுடைய சகோதரியை அலங்கரித்திருந்த நகைகளை வாங்கிச் செல்வதற்காக அவர் வந்திருந்தார். அவரால் கண்ணீரை அடக்கிக் கொள்ள முடிய வில்லை. மார்போடு பாசத்துடன் தன்னுடைய சகோதரியை அணைத்துக் கொண்டார். 

ஆனால் அந்தப் பாவப்பட்ட பெண் எந்த உணர்வையும் வெளிப் படுத்தவில்லை. பின்னர் எரியும் நெருப்பையும் வேலையாட்களையும் மாறி மாறிப் பார்த்துவிட்டு சிவ சிவா என்று கத்திவிட்டு முன்னவரைப் போன்று தைரியமாக எரியும் நெருப்பிற்குள் குதித்தார்.
 

பின்னர் வரிசையாக மற்ற பெண்கள் குதித்தனர். சிலர் தைரியமாகவும் சிலர் ஒன்றும் புரியாத பித்தம் பிடித்தவர் போன்றும் வந்தனர். மற்றவர்களைவிடப் பலவீனமான தைரியம் குறைவான ஒரே ஒரு பெண் மட்டும் அருகில் இருந்த கிறிஸ்தவ சிப்பாயிடம் ஓடி, தன்னைக் காப்பாற்ற கெஞ்சினார். இது போன்ற காட்டு மிராண்டித்தனமான சடங்குகளுக்குத் துணை இருக்கக்கூடாது. கடுமையாகத் தடை விதிக்கப்பட்டிருந்தும் இந்த சிப்பாய் இங்கு வந்திருந்தார். 

இந்தக் காட்டுமிராண்டித்தனமான  செயல்களைக் கண்டு பதறியதால் என்ன செய்வது என்று புரியாமல் அந்தப் பெண்ணை அந்த சிப்பாய் தள்ளிவிட்டதால் அவள் நிலை தடுமாறி தலைகுப்புற எரியும் குழிக்குள் விழுந்தாள். அந்த சிப்பாய் அந்த இடத்தைவிட்டு விலகினார். அவருக்கு உடலெல்லாம் நடுக்கம் ஏற்பட்டு காய்ச்சல் வந்து தன்னுடைய சுய நினைவுக்குத் திரும்பாமலேயே அவர் அன்றிரவு இறந்தார்.
 

ஆனால் இந்த நெருப்பில் குதித்த பெண்கள் காட்டிய துணிவு போலியானது; ஏனென்றால் நெருப்பு அவர்களைச் சுட ஆரம்பித்ததும் கூக்குரலிட ஆரம்பித்தனர்; அந்தக் குழியில் இருந்து தப்பிக்க முயற்சி செய்தனர்; குழியின் விளிம்பிற்கும் ஓடிவந்து ஒருவர்மேல் ஒருவர் ஏறி அதிலிருந்து வெளியேற முயற்சித்தனர். ஆனால் அவர்களுடைய கூக்குரலை அடக்கவும் நெருப்பை அதிகரிக்கவும் பெரிய விறகுக் கட்டைகள் அவர்களின் தலைகள் மேல் வீசப்பட்டன. அவர்களுடைய கூக்குரல் பலவீனம் அடைந்து பெரும் சத்தத்துடன் எரிந்த நெருப்பில் அடங்கியது. 

எல்லா உடல்களும் முழுவதுமாக எரிந்த பின்னர் பிராமணர்கள் புகைந்து கொண்டிருந்த அந்தக் குவியலில் இருந்து கருகிப்போன எலும்புகளையும் சாம்பலையும் சேகரித்து உயர்ந்த துணிகளில் சுற்றி இராமேசுவரம் தீவிற்கு எடுத்துச் சென்று கடலில் வீசினர். பின்னர் இந்தக் குழியை மூடி இறந்து போன மன்னரின் நினைவாகவும் கடவுள்களிடம் சேர்ந்து விட அவருடைய மனைவியர் நினை வாகவும் ஒரு கோயில் எழுப்பப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக