வெள்ளி, 14 அக்டோபர், 2022

Kerala 2வது நரபலிக்கு பின்.. பேஸ்புக்கில் குற்றவாளி போட்ட அந்த போஸ்ட்.. ஷாக்கான போலீஸ்! B

tamil.oneindia.com -   Shyamsundar  ;    திருவனந்தபுரம்: கேரளாவில் 2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது. இதில் பெண்களை நரபலி கொடுத்த கும்பலை சேர்ந்த நபர் பேஸ்புக்கில் செய்திருந்த போஸ்ட் ஒன்று மிகப்பெரிய அளவில் சந்தேங்களை கிளப்பி உள்ளது.
கேரளாவில் எர்ணாகுளம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பத்மா மற்றும் ரோஸ்லி. இவர்கள் இருவருமே அங்கு லாட்டரி சீட்டு விற்று வந்துள்ளனர். இவர்கள் இருவரும்தான் சாபி என்ற இளைஞரால் நரபலி கொடுக்கப்பட்டுள்ளனர்.
பகவான் சிங் மற்றும் லைலா தம்பதிகளுக்காக இந்த நரபலி நடந்துள்ளது. இந்த நரபலி பற்றிய கூடுதல் தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன. இதில் பத்மா கடந்த செப்டம்பர் மாதமும், ரோஸ்லி ஜூலை மாதமும் நரபலி கொடுக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் பத்மா தமிழ் பெண் ஆவார்.

கேரளாவில் இரண்டு நரபலிகளை செய்த 52 வயது முகமது சாபி ஒரு சைக்கோ என்று போலீசார் தெரிவித்து உள்ளனர். பேஸ்புக் மூலம் தான் ஒரு மந்திரவாதி என்று விளம்பரம் கொடுத்து, அதன் மூலம் பகவான் சிங் குடும்பத்திற்கு நெருக்கமாகி, பின்னர் அவர்களுக்காக 2 இரண்டு பெண்களை இவர் நரபலி கொடுத்துள்ளார்.

இதில் பகவான் சிங் மனைவி லைலா மீது சாபி காதலில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இன்னொரு பக்கம் பகவான் சிங் குறித்து தற்போது போலீசார் தகவல்களை வெளியிட்டு உள்ளனர். பகவான் சிங்.. தனது பேஸ்புக் பக்கத்தில் தன்னை ஒரு சாமியார், தந்திரம் செய்ய கூடியவர், ஹைக்கூ கவிஞர் என்று எழுதி இருக்கிறார்., பகவான் சிங் பேஸ்புக்கில் மிகவும் பிரபலமாக இருந்துள்ளார். அவருக்கு 1100க்கும் அதிகமான பாலோவர்ஸ் பேஸ்புக்கில் இருந்துள்ளனர்.

பேஸ்புக்கில் மாற்று மருத்துவம் குறித்து நிறைய போஸ்டுகளை செய்து வந்துள்ளார். சாபிதான் இந்த நரபலிகளை செய்தார் என்றாலும், பகவான் சிங் இதன் மீது தீவிர நம்பிக்கை கொண்டிருந்துள்ளார். இவர் தனது பேஸ்புக் பயோவில், நான் ஒரு சுய - மருத்துவன். எனக்கு மர்ம கலைகள் தெரியும். மாட்டாரு மருத்துவம் தெரியும். நான் மூலிகை செடிகளை வளர்த்து, அதை வைத்து மருத்துவம் கொடுக்கிறேன்.

பிறப்பில் இருந்தே இருக்கும் நோய்களை கூட நாங்கள் குணப்படுத்துகிறோம், என்று குறிப்பிட்டு இருக்கிறார். இவர் பேஸ்புக்கில் ஆக்டிவாக இருந்து அதன் மூலம்தான் சாபியிடம் நெருக்கம் ஆகி உள்ளார். சாபிதான் இந்த நரபலியை கொடுத்தார் என்றாலும் பகவான் சிங்கிற்கும் உள்ளுக்குள் நரபலி கொடுப்பதற்கான ஆசை இருந்துள்ளது என்றே கூறுகிறார்கள் போலீசார்

செப்டம்பர் மாதம் இவர்கள் இரண்டாவது பெண்ணை நரபலி கொடுத்துள்ளனர். அந்த பெண் பத்மா . அவர் தமிழ் பெண். இதற்கு பின் ஒரு வாரம் கழித்து பகவான் சிங் தனது பேஸ்புக் பக்கத்தில் போஸ்ட் ஒன்றை செய்துள்ளார். அந்த போஸ்ட்தான் தற்போது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அந்த போஸ்டில் இவர் ஹைக்கூ கவிதை ஒன்றை எழுதி உள்ளார்.

அதில், ஒரு அடுப்பு உலை, வேலை செய்யும் கொல்லனின் மனைவி, அவள் உடல் வளைந்திருந்தது, என்று சம்பந்தம் இல்லாத 3 வரிகளை போஸ்ட் செய்துள்ளார். இந்த போஸ்டிற்கு என்ன அர்த்தம் என்று போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். கொலைக்கும் இந்த போஸ்டிற்கும் எந்த சம்பந்தமும் இருக்கிறதா என்று போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

இது எதாவது சீக்ரெட் மெசேஜா.. இரண்டாவது கொலையை சுட்டிக்காட்டும் விதமாக இவர் ரகசியமாக போஸ்ட் செய்துள்ளாரா என்று கேள்வி போலீசாரிடம் எழுந்துள்ளது. ஏனென்றால் அந்த இரண்டு பெண்களை கொலைக்கு முன்பாக இவர்கள் டார்ச்சர் செய்யப்பட்டு உள்ளனர். உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டி அதில் சாம்பல் தடவி பூஜை செய்துள்ளனர்

மொத்தம் 56 துண்டுகளாக ஒவ்வொரு உடலையும் வெட்டி உள்ளனர். இதில் அந்தரங்க உறுப்பையும் தனியாக வெட்டி எடுத்துள்ளனர். பின்னர் உடல்களுக்கு பூஜை போட்டுள்ளார். பின்னர் அதை உலையில் போட்டு சமைத்து சாப்பிட்டும், பச்சையாக சாப்பிட்டும் உள்ளனர்.
ஒருவேளை இதைத்தான் பகவான் சிங் கவிதை மூலம் குறிப்பிட்டாரா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக