ராதா மனோகர் : ரஷியாவின் பெலாரஸ் ஆக்கிரமிப்பு பற்றி பெல்லரசின் எதிர்க்கட்சி தலைவர் சுவெட்டலான ஷிகாணோஷ்கயா ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையின் ஒரு பகுதி
பெலாரஸ் நாட்டில் ரஷ்ய படைகளை நிரந்தரமாக நிறுத்தி வைக்கும் ஆக்கிரமிப்பு முயற்சியில் ரஷ்யாவும் அதன் அடிவருடி பெலாரஸ் ஆட்சியாளர்களும் ஈடுபடுகிறார்கள்
பெல்லரசின் அடையாளத்தை சிதைத்து பெல்லரசுக்கும் ஐரோப்பியாவுக்கும் இடையே நிலவும் தொடர்புகளை துண்டித்து பெல்லரசின் சமூக வாழ்வை நாசமாக்கும் வேலையை ரஷியா செய்கிறது.
பெல்லர்ஸில் ரஷ்ய ராணுவத்தை நிறுத்துவதன் மூலம் உக்கிரேன் போலாந்து லிதுவேனியா மற்றும் முழு ஐரோப்பிய ஒன்றியத்தையும் இதர நேட்டோ நாடுகளையும் பயமுறுத்துகிறது
ஐரோப்பிய ஒன்றியம் எங்கள் நாட்டில் உண்மையான ஜனநாயகத்தையும் எங்கள் அடையாளத்தையும் ஐரோப்பியவுடன் உள்ள உறவையும் தொடர உதவவேண்டும்
பெல்லர்ஸில் உள்ள ரஷிய போலி அரசை தூக்கி எறியவேண்டும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக