புதன், 12 அக்டோபர், 2022

திடீரென குறைந்த FaceBook Followers.. பிரபலங்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. பின்னணி என்ன ?

kalaignarseithigal.coம்- Praveen  :  உலகம் முழுவதும் டிஜிட்டல் மயமாகி உள்ள இன்றைய காலக் கட்டத்தில், சமூக வலைதளங்கள் மிகப்பெரிய அளவில் முக்கிய பங்காற்றி வருகிறது. அதிலும் பேஸ்புக் வந்தபின்னர் உலகம் பெரிய அளவில் மாற்றத்தை சந்தித்துள்ளது. உலகம் முழுவதும் 2.85 பில்லியன் பயனாளிகள் பேஸ்புக் தளத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
கடந்த 2008-ம் ஆண்டு அறிமுகமான பேஸ்புக் தளம் குறுகிய காலத்திலேயே பெரும் வரவேற்பை பெற்றது. இதன் காரணமாக இதை உருவாக்கிய மார்க் ஜுக்கர்பெர்க் சாமானியராக இருந்து 4 ஆண்டுகளில் உலகப் பணக்காரர் பட்டியலில் இடம்பெற்றார்.
அதன் பின்னர் இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் போன்ற செயலிகள் மூலம் பேஸ்புக் பெரும் லாபத்தை ஈட்டத்தொடங்கியது. அதோடு பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் போன்ற செயலிகளை ஒண்றிணைத்து மெட்டா என்ற தாய் நிறுவனம் உருவாக்கப்பட்டது.
ஆனால், சமீபகாலமாக மெட்டா நிறுவனம் பெரும் சர்ச்சையில் சிக்கி வருகிறது. தனிமனித உரிமையில் தலையிடுவதாகவும், பயனர்களின் தரவுகளை தவறாக பயன்படுத்துவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. அதைத் தொடர்ந்து மெட்டா நிறுவனத்தின் மதிப்பு பெரும் அளவில் சரிந்தது.

இந்த நிலையில், தற்போது ஒரு லட்சம் பாலோவர்கள் வைத்திருந்தவர்கள் உள்பட அனைவருக்கும் குறைந்த எண்ணிக்கையில் அதாவது வெறும் 9,000 என்ற எண்ணிக்கையிலேயே பாலோவர்கள் இருப்பதாக காட்டியதால் பேஸ்புக் பயனர்கள் அதிர்ச்சியடைந்தனர். குறிப்பாக பேஸ்புக் நிறுவனர் மார்க்கின் பக்கத்தை 100 மில்லியன்க்கும் அதிகமானோர் பின்தொடரும் நிலையில் அங்கும் 9,000 என்ற எண்ணிக்கையிலேயே பாலோவர்கள் இருப்பதாக காட்டியது.

இதுதொடர்பாக பலர் மெட்டா நிறுவனத்திடம் கேள்வி எழுப்பிய நிலையில், அதற்கு அந்நிறுவனம் சார்பில் எந்த பதிலும் தெரிவிக்கப்படவில்லை. இதன் காரணமாக காலையில் இருந்து பேஸ்புக்கில் இதுதொடர்பான விவாதம் தொடர்ந்து எழுந்து வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக