புதன், 12 அக்டோபர், 2022

காதலித்து ஏமாற்றிய டீச்சர் - பிளஸ் -2 மாணவர் தற்கொலை

 மாலைமலர் : டீச்சர் நடத்திய காதல் லீலையால் பிளஸ்-2 மாணவரும் அவருடன் நெருக்கம் காட்டி உள்ளார். இருவரும் அருகருகே நின்ற படி செல்போனில் புகைப்படங்களையும் எடுத்துள்ளனர்.
அம்பத்தூர்: சென்னை அம்பத்தூர் கள்ளிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ஷர்மிளா. இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக உள்ளார்.
பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்புகளுக்கு டீச்சராக இருந்து வரும் ஷர்மிளாவுக்கு இன்னும் திருமணமாகவில்லை. பள்ளியில் பாடம் நடத்திய பிறகு மாலை நேரத்தில் தனது வீட்டில் வைத்தே மாணவர்களுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கி பாடம் நடத்தி இருக்கிறார்.
இவரிடம் அப்பகுதியை சேர்ந்த மாணவர்கள் பலர் டியூசனில் சேர்ந்து படித்து உள்ளனர். கள்ளிக்குப்பம் பகுதியை சேர்ந்த பிளஸ்-2 மாணவர் ஒருவரும் ஆசிரியை ஷர்மிளாவிடம் டியூசனுக்கு சென்று படித்து உள்ளார்.
இந்த பிளஸ்-2 மாணவனை ஆசிரியை ஷர்மிளா காதல் வலையில் வீழ்த்தி உள்ளார். மாணவனுக்கு பள்ளி பாடத்துடன் சேர்த்து காதல் பாடத்தையும் அவர் கற்றுக்கொடுத்துள்ளார்.

இப்படி ஷர்மிளா டீச்சர் நடத்திய காதல் லீலையால் பிளஸ்-2 மாணவரும் அவருடன் நெருக்கம் காட்டி உள்ளார்.

இருவரும் அருகருகே நின்ற படி செல்போனில் புகைப்படங்களையும் எடுத்துள்ளனர். இந்த படங்களை இருவருமே வாட்ஸ்அப்பில் பகிர்ந்து தங்களது பழக்கத்தை அதிகரித்துள்ளனர்.

இப்படி பிளஸ்-2 ஆசிரியை-மாணவனின் காதல் நீண்டு கொண்டே சென்றுள்ளது. டியூசன் முடிந்து வீடு திரும்பிய பிறகும் ஆசிரியை ஷர்மிளா, செல்போனில் தொடர்பு கொண்டு மாணவனுடன் மணிக்கணக்கில் பேசி வந்துள்ளார்.

இந்த நிலையில் மாணவன் பள்ளிப்படிப்பை முடித்து உள்ளார். இதன் பிறகு ஆசிரியை, மாணவன் இடையேயான உறவில் விரிசல் விழுந்துள்ளது.

ஆசிரியைக்கு வேறு இடத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்து உள்ளது. இதனால் மாணவனுடன் பேசுவதை ஆசிரியை தவிர்த்து வந்துள்ளார்.

அதே நேரத்தில் மாணவனோ ஆசிரியையுடன் தொடர்ந்து பேச வேண்டும் என்ற எண்ணத்திலேயே இருந்துள்ளார்.

இது தொடர்பாக ஆசிரியை ஷர்மிளாவை நேரில் சந்தித்து மாணவன் பேசி உள்ளார். என்னை காதலித்து விட்டு வேறு ஒருவரை திருமணம் செய்வது நியாயமா? என்று கேட்டு ஷர்மிளாவுடன் மாணவன் சண்டை போட்டு உள்ளார்.

ஆனால் மாணவனுடனான தொடர்பை துண்டிப்பதில் ஆசிரியை உறுதியாக இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த மாணவன் தற்கொலை செய்ய முடிவு செய்தார். இதன்படி அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான்.

இதை பார்த்து அவரது பெற்றோர் கதறி அழுதனர். இது தொடர்பாக அம்பத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மாணவன் பயன்படுத்திய செல்போனை அவனது நண்பர்கள் ஆய்வு செய்து பார்த்தனர். அப்போது ஷர்மிளா டீச்சரும், மாணவனும் ஒன்றாக இருக்கும் படங்கள் அதில் இருந்தன. நீண்ட நேரமாக இருவரும் செல்போனில் பேசி இருப்பதும் பதிவாகி இருந்தது.

இது பற்றி மாணவனின் உறவினர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதை தொடர்ந்து அம்பத்தூர் மகளிர் போலீஸ் ஷர்மிளாவை பிடித்து விசாரணை நடத்தினர்.

அவரது செல்போனையும் வாங்கி பார்த்து ஆய்வு செய்துள்ளனர். அதில் ஷர்மிளா டீச்சர் மாணவனை காதலில் வீழ்த்தியது உறுதியானது. பிளஸ்-2 மாணவன் மைனர் என்பதாலும், தவறான கண்ணோட்டத்தோடு பழகிய குற்றத்துக்காகவும் ஷர்மிளா டீச்சர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட ஆசிரியை ஷர்மிளா கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.

ஆசிரியை ஷர்மிளா, மாணவனுடன் எந்த மாதிரியான தொடர்பில் இருந்தார்? என்பது பற்றி கண்டு பிடிப்பதற்காக அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இந்த முடிவுகள் வந்த பின்னரே, ஷர்மிளா டீச்சர் மாணவனோடு உடல் ரீதியான உறவு வைத்திருந்தாரா? என்பது தெரியவரும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இளம் ஆசிரியை ஒருவர் பள்ளி மாணவனை காதல் வலையில் வீழ்த்தியதும், இதன் காரணமாக மாணவன் தற்கொலை செய்து கொண்டதும் அம்பத்தூர், கள்ளிகுப்பம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த சம்பவம் மாணவன் படித்த பள்ளியை சேர்ந்த மற்ற மாணவ-மாணவிகள், ஆசிரியைகள் மத்தியிலும் கடும் அதிர்ச்சியும் ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக