திங்கள், 24 அக்டோபர், 2022

கோவையில் இடம்பெற்ற கார் குண்டு வெடிப்பு - காத்திருக்கும் ஆபத்து!.. Ex-Muslims of Tamil Nadu

 Rishvin Ismath  

குண்டு  வெடிப்பிற்கு சுமார் 5 மணி நேரத்திற்கு முன்னர், அதாவது 22 ஆம் திகதி சனிக்கிழமை இரவு 11.30 மணி அளவில் இதுவரை அடையாளம் காணப்படாத 4 நபர்கள், தவறுதலாக காரில் குண்டு வெடித்ததில் கொல்லப்பட்ட அப்துல் காதர் ஜமீஷா முபீன் வீட்டில் இருந்து மர்மப் பொருளை எடுத்துச் செல்லும் CCTV காட்சி. காவல் துறையினரும், புலனாய்வுத் துறையினரும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்நாடு மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது.
விரிவாகப் பேச வேண்டிய விடயங்கள் நிறையவே உள்ளதால் இந்திய இலங்கை நேரப்படி இன்று இரவு 8.00 மணிக்கு கிளப்ஹவுசில்....
குண்டு தாரி வேறு திட்டத்துடன் சென்ற பொழுது குண்டு தவறுதலாக வெடித்து இருக்கலாம் என்று கருப்படுகின்றது. குண்டு வெடித்த இடத்தில் இருந்தும், குண்டு வெடிப்பில் கொல்லப்பட்ட அப்துல் காதர் ஜமீஷா முபீன் உடைய வீட்டில் இருந்தும் வெடி குண்டுகள் தயாரிக்கப் பயன்படும் பொருட்கள், ரசாயனக் கலவைகளை போலீசார் கண்டு பிடித்துள்ளனர்.
அப்துல் காதர் ஜமீஷா முபீன் உடைய வீட்டில் இருந்து மர்மப் பொருட்களை எடுத்துச் செல்லும் நான்கு பேர் குறித்து CCTV பதிவுகள் மூலம் அறிந்து கொண்ட காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அப்துல் காதர் ஜமீஷா முபீன் பாதுகாப்புத் தரப்பினரால் 2019 ஆம் ஆண்டு விசாரணைக்கு உள்ளாக்கப் பட்டு இருக்கின்றார்.
கோயம்புத்தூர் பகுதி RSS இந்துத்துவாக்களின் நடமாட்டம் மட்டுமின்றி இஸ்லாமியவாதிகள், ஜிஹாதிகளின் ஆதிக்கம் நிறைந்த பகுதியாகும். 1998 ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் ஜிஹாதிகள் தொடர் குண்டு வெடிப்புக்களை நிகழ்த்தி இருந்தனர். இதே கோயம்புத்தூரில் தான் இஸ்லாத்தை விட்டு வெளியேறியதற்காக முன்னால் முஸ்லிமான தோழர் ஃபாரூக் 2017 ஆம் ஆண்டு அல் தக்கியா முறையில் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டார்.
கோயம்புத்தூர் பகுதியில் இஸ்லாமியவாதிகளின் ஆதிக்கமும், செல்வாக்கும் பலம்பெற்று வந்தததை கிளப்ஹவுஸ் மூலம் அறிய முடியுமாக இருந்தது. இஸ்லாமியவாதிகளின் செல்வாக்கின் ஒரு வெளிப்பாடாகவே தோழர் Aneesh Jasy ST அவர்களுடைய கைது கடந்த டிசம்பரில் இடம்பெற்றது.
இஸ்லாமியவாதிகள் ஜிஹாதிகளாக மாறுவதற்கான சாத்தியங்கள் அதிகமுள்ளன என்பது இரகசியமான விடயம் அல்ல. (மேலதிக தெளிவு தேவை என்றால் முதல் கொமண்டில் உள்ள ஆக்கத்தை வாசிக்கலாம்.)
ஜிஹாதிகளின் அதிகரிப்பு, அதனால் ஏற்படும் ஆபத்துக்கள் பற்றி நிறையவே தகவல்கள், விடயங்கள் உள்ளன, அவற்றை முழுவதுமாக எழுத்தில் கொண்டு வருவது சிரமமான ஒன்றாகும், ஆகவே கிளப்ஹவுஸ் மூலம் இன்றிரவு 8.00 மணிக்கு இணைந்து கொள்ளுங்கள்.
இணைந்து கொள்வதற்கான இணைப்பு :
https://www.clubhouse.com/.../ex.../BXMPCmve/xoKrN9WY...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக