செவ்வாய், 25 அக்டோபர், 2022

திராவிடியா பசங்க..” நடிகை கஸ்தூரியின் “ ட்வீட்.. கொந்தளித்த திமுகவினர்

கஸ்தூரியின் கொச்சை ட்வீட்
tamil.oneindia.com.. - Noorul Ahamed Jahaber Ali  :  சென்னை: திராவிட பசங்க என்று போடுவதற்கு மாற்றாக அதில் உள்ள சில எழுத்துக்களை மாற்றி திராவிட சிந்தனை கொண்டவர்களின் தாய்மார்களை இழிவுபடுத்தும் வகையில் கெட்ட வார்த்தையில் ட்வீட் செய்த நடிகை கஸ்தூரிக்கு திமுகவினர் மற்றும் திராவிட இயக்கத்தினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
நடிகை கஸ்தூரி தொலைக்காட்சி விவாதங்களி கலந்துகொண்டு அரசியல் ரீதியாக பல்வேறு விமர்சனங்களை பேசி வருகிறார். அதேபோல் ட்விட்டரில் அரசியல் விமர்சனங்களை அவர் முன்வைத்து வருகிறார்.குறிப்பாக பாரதிய ஜனதா கட்சி, இந்துத்துவ அமைப்புகள், வலதுசாரி சிந்தனைகளுக்கு ஆதரவாகவும், ஆளும் திமுக அரசு, திராவிட அமைப்பினர், இடதுசாரிகளுக்கு எதிராக காட்டமான விமர்சனங்களையும் அவர் முன்வைத்து வருகின்றனர்.
கஸ்தூரியின் கொச்சை ட்வீட்
இந்த நிலையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, அதிகம் பட்டாசு வெடிக்க சொன்ன வீடியோவை ரீட்வீட் செய்துள்ள கஸ்தூரி, "பாசிச பாஜக அண்ணாமலை தீபாவளி கொண்டாடுங்கன்னு சொன்னதுனாலே, இனமான திராவிடியா பசங்க எல்லாரும் இப்போ தீபாவளியை புறக்கணிக்ச்சாகணுமே, என்ன பண்ணுறது? "விடுமுறை நாள் ' னு சொல்லி பட்டாசு வெடிச்சு பிரியாணி திங்க வேண்டியதுதான்." என்று குறிப்பிட்டு உள்ளார்.

பலர் கண்டனம்
இந்த ட்வீட்டில் திராவிட சிந்தனை கொண்டவர்களின் தாய்மார்களை இழிவுபடுத்தும் வகையில் கெட்ட வார்த்தையாக மாற்றி ட்வீட் செய்து உள்ளதாக பலர் அந்த பதிவின் கீழேயே கண்டனம் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக திமுக செய்தித்தொடர்பாளர் கவிஞர் சல்மா, திமுக செய்தித்தொடர்பு இணை செயலாளர் ராஜீவ் காந்தி ஆகியோர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

சல்மா கண்டனம்
"பொது வெளியில் கொஞ்சம் கண்ணியமான வார்த்தைகள் பேசுங்கள்." என்று சல்மா கருத்திடவே, நடிகை கஸ்தூரி "திராவிடியம் கண்ணியமற்ற விஷயம் என்று உங்களுக்கும் புரிந்து விட்டதா ? நன்று. தினம்தோறும் என்னை உங்கள் கட்சி மற்றும் மத பற்றாளர்கள் தூற்றும் போது கண்ணியம் ஒரு பொருட்டாக படவில்லையா? நூலிபன் என்று சொன்னவர்களுக்கு கண்ணியம் நாகரிகம் குறைந்தபட்சம் மனசாட்சி...? " என்று மீண்டும் அதே கொச்சையான வார்த்தையில் பதில் கொடுத்துள்ளார்.
 கஸ்தூரி பதில்

கஸ்தூரி பதில்

"அப்படி யார் திட்டினாலும் தவறுதான். அவர்களை யார் ஆதரிக்கிறார்கள்?" என சல்மா கேட்க, "உங்காளுங்க தான்" என்று கஸ்தூரி பதிலளித்தார். உடனே சல்மாவோ, "வார்த்தைகளை பயன்படுத்தும் போது கவனமாக இருப்பது நல்லது. இதில் என்ன சலுகை? யாராக இருந்தால் என்ன?" என்று கேட்டு உள்ளார்.

ராஜீவ் காந்தி

ராஜீவ் காந்தி

கஸ்தூரின் பதிவுக்கு கீழே ராஜீவ் காந்தி, "உங்களுக்கு வாய் கொழுப்பு ரெம்ப அதிகம் தான்!! என்ன செய்வது இரண்டாயிரம் ஆண்டு உயர்சாதி திமிர்...." என்று விமர்சிக்க, "சகோதரரே, எனக்கு அதிகமாக இருப்பது நேர்மை, மனசாட்சி, நினைவாற்றல், வெட்கம், மானம். வாய் கொழுப்பு அல்ல சகோதரரே, வாய்மை. இதெல்லாம் தான் நீங்க எப்பவோ வேணாம்னு வந்துடீங்களே. ஒரே பாட்டு, ஒரே ராகம் ஒரே வரி... அந்த சாதி பாட்டை தவிர வேற எதுனா புதுசா பாட்டு படிங்க ப்ரோ." என்று பதிலளித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக