வெள்ளி, 14 அக்டோபர், 2022

திருநங்கைகளின் தலைமுடியை வெட்டி இளைஞர்கள் அட்டகாசம்!

May be an image of 2 people and text that says 'JUST IN SUN N”WS திருநங்கைகள் மீது தாக்குதல்- காவல்துறை நடவடிக்கை திருநங்கைகளை கடுமையாக தாக்கி, தலைமுடியை கத்தரித்த இளைஞர்கள்; சமூக வலைதளத்தில் பரவும் வீடியோவை வைத்து விசாரணையில் இறங்கிய போலீசார், அந்நபர்களை கண்டுபிடித்துள்ளனர்! பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குற்றம் இழைத்தவர்க கண்டுபிடித்துள்ளோம்; சட்ட நீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தென்மண்டல காவல்துறை ட்வீட் ofo SUNNEWSTAMIL SUNNEWS sunnewslive.in 120CT 2022'

Grace Banu  :  தூத்துகுடி மாவட்டம் கழுகுமலையை சேர்ந்த இரண்டு திருநங்கைகள் கடஎத மாதம் 7 தேதி பிச்சையெடுக்க சென்ற பொழுது,
 அதே பகுதியை சார்ந்த நோவாயூபன்(28) மற்றும் விஜய்(27) இருவரும் தொடர்ந்து திருநங்கைகளை கேலி கிண்டல் செய்வதும் கத்தியல் மிரட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்திருக்கின்றனர் .
கடந்த மாதம் 7 தேதி இரு திருநங்கைகளையும் வழி மறித்து அவர்களை கத்தியால் அடித்த்து அவர்கள் ஆடையை அவிழ்த்து முடியை வெட்டி மிக கொடுரமான தாக்குதலை நடத்தி அதை விடீயோ பதிவு செய்திருக்கின்றனர்.
பாதிக்கபட்ட திருநங்கைகள்  காவல்நிலையம் செல்ல கூடாது,
 மருத்துமனையில் சேர கூடாது என போகிற இடமெல்லாம் அவர்களை மிரட்டி இருக்கிறார்கள் .


இதனால் பயம் அடைந்த திருநங்கைகள் தலைமறைவாகி வேறு ஊரில் வசித்து வருகின்றனர்
நேற்று நான் பதிவிட்ட வீடியோ பதிவை பார்த்து தமிழக காவல்துறை தென்மண்டல  ஐ.ஜி திரு அஷ்ரா கார்க் உடனடியாக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்ய உத்தரவிட்டார் .
தமிழக காவல்துறைக்கு நன்றி ..கடுமையான சட்டங்கள் இருந்தால்தான் இது போன்ற வன்முறைகள் திருநர் மக்களுக்கு எதிராக நடைபெறமல் தடுக்க முடியும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக