வெள்ளி, 14 அக்டோபர், 2022

70களில்தான் முதல் தலைமுறை பட்டியலின மக்கள் படித்து சுயமரியாதையை...

May be an image of 4 people and text that says 'PA Ranjith- கும் Director Ameer கும் மேடையில் கருத்து மோதல் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட Director PA Ranjith R'

Kandasamy Mariyappan  :  1. பெரியார் சாதியை ஒழிச்சிட்டாரா..!?
வலதுசாரி கும்பல் மற்றும் ஊதா, பச்சை, மஞ்சள், வெள்ளை சங்கீஸ்.!
பெரியார் எப்படா/டீ சாதியை ஒழித்தேன் என்று கூறினார்.!
இந்த கருமம் பிடித்த சாதி ஒழியனும் என்றுதானே கடைசி வரையில் போராடினார்டா/டீ.!
கடவுள் பெயரால் இந்த சாதிய கட்டமைப்பை உறுதி படுத்துறானுக, எனவே அந்த கடவுளே இல்லேங்கிறேன் என்றார்டா/டீ.!
2. ஒவ்வோரு கிராமத்திலும் காலனி, தனி சுடுகாடுன்னு இருக்கு.,
இப்படி சாதியை ஒழிக்காம நாமெல்லாம் தமிழன், தமிழனாக ஒன்று கூடுவோம் வாங்க, திராவிடர்கள்னு எங்களை ஓட்டுக்காக ஏமாற்றுகிறீர்கள்.!
RSS வளர்க்கும் ஊதா சங்கீஸ்.!
என்ன பண்ணலாம்னு சொல்லுங்க.!
நாளையிலேர்ந்து எல்லா கிராமங்களிலும்
ஒரு வேளாளர் வீடு, அடுத்து முக்குலத்தோர் வீடு, அடுத்து உடையார் வீடு, அடுத்து பறையர்/பள்ளர் வீடு, அடுத்து கோனார் வீடு, அடுத்து நாடார் வீடு, அடுத்து பறையர்/பள்ளர் வீடு, அடுத்து ஒரு அய்யர் வீடு, அடுத்து ஒரு செட்டியார் வீடு, அடுத்து பறையர்/பள்ளர் வீடு, அடுத்து ஒரு வலையர் வீடு, அடுத்து ஒரு வன்னியர் வீடு, அடுத்து ஒரு நாயுடு வீடு, அடுத்து ஒரு பறையர்/பள்ளர் வீடு என்று அடுக்கி விடலாமா.!
இதைத்தான் கலைஞர் சமத்துவபுரம் என்று 1996ல் ஆரம்பித்தார்.!
100 கிராமங்களை அமைத்தார்.!
2001 மற்றும் 2011ல் நீங்கள் தேர்ந்தெடுத்த ஜெயலலிதா 15 ஆண்டுகளாக கிட்ப்பில் போட்டார்.!


என்ன பண்ணீங்க, பெரும்பாலானவர்கள் அதிமுகவுக்கே மீண்டும் மீண்டும் வாக்களிச்சீங்க.!
கலைஞர் அவர்கள்..,
பறையர்/பள்ளர்/அருந்ததியர் வாழ்ந்த பகுதிகளுக்கு பட்டா வழங்கி தீப்பிடிக்காத வீடு கட்டும் திட்டத்தை 1970லேயே தொடங்கி செயல்படுத்தினார்.!
நீங்க என்ன பண்ணீங்க.., பெரிய அய்யா, பெரிய ஆன்ஞ்சாயி சொன்னாங்கன்னு கை சின்னத்திற்கும் பிறகு இரட்டை இலை சின்னத்துக்கும் வாக்களிச்சீங்க.!
சாதியை ஒழிக்க வேண்டும் என்றால் புரிதல் முக்கியம்.!
அது இல்லாமல் அந்த நச்சு செடியை அழிக்கவே முடியாது.!
ஏதோ ஒரு பத்து ஆண்டுகளிலோ 50 ஆண்டுகளிலோ ஒழித்து விடக் கூடியது இல்லை சாதி.!
எனது 50 ஆண்டுகால வாழ்க்கையில் நான் பார்த்த சாதிய மாற்றம்..,
70களில் குடியானவர் வீடும் குடிசைதான், பறையர் /பள்ளர் வீடும் குடிசைதான்.!
ஆனாலும் குடியானவர் வீட்டிற்கு செல்லும் பறையர் /பள்ளர்கள் தங்களது துண்டை கக்கத்தில் வைத்துக் கொண்டு குக்கி கொண்டு வாசலில் உட்கார்ந்து விடுவார்.!
வயதானவர்கள், ஏய் தூர நில்லு, ஒட்டி நிக்காதே தீட்டு என்பார்கள்.!
அப்போது எனக்கு புரியவில்லை,
அவர்களின் ஆழ்மனதில் திணிக்கப்பட்டது என்று இப்போது புரிகிறது.!
80களில் விவசாய தொழிலாளர்கள் குடியானவர்களின் வீட்டுத் திண்ணை வரை வருவார்கள். வயதான குடியானவர்கள்... திண்ணை வரை விட்டுட்டானுவ என்ற புலம்பலோடு உள்ளே சென்று விடுவார்கள்.!
தீபாவளி, பொங்கல் நேரத்தில் பறையர் /பள்ளர்கள் பாத்திரம் எடுத்துக் கொண்டு குடியானவர்களின் ஒவ்வொரு வீட்டிற்கு சென்று சோறு, பலகாரம் வாங்குவார்கள்.!
அதே போன்று குடியானவர்கள் வீட்டில் விழா என்றாலும் பாத்திரம் வைத்துக் கொண்டு கடைசியாக உணவருந்திவிட்டு, சோறு வாங்கி செல்வார்கள்.!
அந்த நேரத்தில் உணவு மிகவும் அரிது.!
90களில் ஒரு சிரிய மாற்றம் ஏற்படத் தொடங்கியது.!
70களில் திராவிட சிந்தனை போட்ட விதையால் முதல் தலைமுறை பறையர் /பள்ளர்கள் பலர் படித்து வந்ததால் சுயமரியாதையை உணர ஆரம்பித்தனர்.!
புதிய பொருளாதார கொள்கையால் தொழிற்சாலைகள் பெருக ஆரம்பித்தன.!
பல பறையர் /பள்ளர்கள் அங்கே வேலைக்கு செல்ல ஆரம்பித்தனர்.!
2000த்தில் பொருளாதார நிலையில் சற்றே மூச்சு விட ஆரம்பித்தனர்.!
குலத் தொழிலான தப்படிப்பதை நிறுத்தினர்.!
குடியானவர்கள் வீட்டிற்கு சென்று உணவு பலகாரம் வாங்குவதை நிறுத்தினர்.!
70, 80களில் குடியானவர்களை அய்யா, ஆன்ஞ்சயி, ஆண்ட, சின்ய்யா, சின்ன ஆன்ஞ்சயி என்று அழைக்கும் வார்த்தைகள் மாறி..,
90களில் அண்ணா, தம்பி, அக்கா, அத்தை, மாமா மற்றும் பெயர் சொல்லி அழைப்பது என்ற நிலைக்கு வந்தனர்.!
இந்த மாற்றம் எல்லாம் ஏதோ ஒரே இரவில் Magicஆல் வந்துவிடவில்லை.!
1912ல் ஆரம்பித்து, தொடர் விழிப்புணர்வு போராட்டம், ஆட்சி அதிகாரம் இவற்றால் படிப்படியாக ஏற்பட்ட மாற்றம்.!
மண உறவு மற்றும் பொது சுடுகாடு மட்டுமே சாதி ஒழிப்பு என்று நேராக  அங்கே வந்து நிற்கின்றனர்.!
மண உறவு மட்டுமே சாதியை ஒழிக்காது.!
இன்னும் கூறப் போனால் இன்றைய சூழலில் மண உறவு சாதி வெறியை வளர்க்குமே ஒழிய சாதிய எண்ணத்தை மறக்கடிக்காது.!
பறையர்/ பள்ளர்/ அருந்ததிய சமூக மக்களுக்காக அதே சமூகத்தார்களால் எல்லா மாவட்டங்களிலும் பல கல்வி நிலையங்கள் ஏற்படுத்தி அவற்றில் சிறந்த மாணவர்களை அடையாளம் கண்டு...
அவர்களை குறிப்பிட்ட பள்ளிகள் கல்லூரிகளில் படிக்க வைத்து UPSC உட்பட எல்லா போட்டித் தேர்வுகளிலும் SC பட்டியல் தாண்டி பொதுப்பிரிவிலும் தேர்வாகி வரும் அளவிற்கு தயார் செய்ய வேண்டும்.!
ஒவ்வொரு தாலுக்கா அளவிலும் தொழில் செய்வதில் பங்கெடுத்து பல தொழில் முனைவர்களை உருவாக்க வேண்டும்.!
குலத் தொழில்களை அறவே செய்யாமல் இருக்க வேண்டும்.!
சமூக அந்தஸ்த்தை உயர்த்த வேண்டும்.!
நான் சாதியால் தாழ்வானவர் இல்லை என்ற சிந்தனை மேலோங்க வைக்க வேண்டும்.!
இதை செய்யாமல் மண உறவை ஏற்படுத்துவேன், திராவிட கட்சிகள் எங்களுக்கு என்ன செய்தது என்றால்..,
மேடையில் ஹீரோவாக ஆகலாமே ஒழிய ஒரு போதும் சாதிய சிந்தனை மாறாது.!
கடந்த 50 ஆண்டுகளில் சாதிய நெகிழ்வு சிந்தனை ஏற்பட்டுள்ளது.  
இதனை அடுத்த நிலைக்கு எப்படி எடுத்து செல்வது என்று சமூக கண்ணோட்டத்துடன் சிந்திக்க வேண்டும்.!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக