புதன், 26 அக்டோபர், 2022

நடிகை கஸ்தூரி எனும் கட்டதுரை.... மருத்துவர் ஷாலினி

ஒரு பெண் விரும்பவில்லை என்றால் அவளை தொடக்கூடாது என்ற..." - மனநல மருத்துவர்  ஷாலினி! | nakkheeran

Shalini  : நடிகை கஸ்தூரி எனும் கட்டதுரை....
Me Too Movement சென்னையில் சூடு பிடித்த காலம். Behindwoods ஸ்டுயோவில் எனக்கும் நடிகை கஸ்தூரிக்கும் ஒரு டிபேட் ஏற்பாடு செய்திருந்தார்கள்.
நான் கிளினிக்கில் வேலையை முடித்துவிட்டு அப்படியே அங்கே போய்விட்டேன்... வழக்கம் போல மேக்கப்பாமல்...

அவருடைய அனைத்து கருத்துகளோடும் நான் ஒத்துப்போகவில்லையென்றாலும்”- நடிகை  கஸ்தூரி | nakkheeran

நான் ஸ்டுடியோ போய் ரொம்ப நேரம் கழித்துத்தான் கஸ்தூரி வந்தார். வந்ததும் மேக்கப் போடணும் என்றார்.
ஏற்கனவே ரொம்ப லேட் என்று நான் சுட்டிக்காட்ட, "நீங்க நாச்சுரல் ப்யூட்டி, எனக்கு மேக் கப் போட்டா தான்" என்று வைஸ்கிராக்கிவிட்டு போனார்.
மேக் அப் முடித்து வந்தும் நாற்காலியில் உட்கார்ந்து பல தடவை சரி பார்த்து டச் அப் பண்ணி....
எனக்கு வேறு டாக்சிக் ஃபெமினிட்டி என்றால் ரொம்ப அலர்ஜி...
ஏதோ occupational conditioning உபயத்தால் பொறுமையாக இருந்தேன்.
கடைசியில் டிபேட்டினோம். பேச ஆரம்பித்ததும் நேரம் வேகமாக ஓடியது. பேசி முடித்து விட்டு நான் கிளம்ப, கஸ்தூரி நின்று பேரம் பேசி பணம் வாங்கினார்.


மறுநாள் வீடியோ வெளியானது.
உடனே பார்க்க நேரமில்லை.  இரவு வீடு திரும்பி சேனல் அனுப்பிய சுட்டியை தட்டினால் வீடியோ திறக்கவில்லை.
என்ன ஆச்சு என்று சேனலின் சகோ தணிகைக்கு ஃபோன் அடித்தால், "அந்த வீடியோவை ரிமூவ் பண்ண சொல்லி கஸ்தூரி மேடம் சொன்னாங்க..."
"என் நேரத்தை வீணடித்து" என்று நான் எரிச்சல் பட, தணிகை சாரி சொல்ல, "ஏன் ரிமூவ் பண்ண சொன்னாங்க?" என்றால்....
"அவங்க பேசுவதை விட நீங்க பேசுனது தான் சரியா இருந்தது, அதானு நினைக்கிறேன்" என்றார் தணிகை....
அவ்வளவு தான் இந்த கஸ்தூரி @ ஷண்மதி.....
Desperate Bravado.... பாவம் அவருக்கு என்ன நிர்ப்பந்தமோ!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக