மாலை மலர் : வாஷிங்டன்: அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த இந்திய வம்சாவளி இளைஞர் ஜஸ்தீப் சிங் (36). இவர், மனைவி ஜஸ்லீன் கவுர், மற்றும் 8 மாத பெண் குழந்தை ஆரூஹி தேரி, உறவினர் அமன்தீப் சிங் (39), ஆகியோருடன் வசித்து வருகிறார்.
கலிபோர்னியாவின் மெர்செட் கவுன்டி பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் இவர்கள் 4 பேரும் கடத்தப்பட்டனர். இவர்களை கடத்தியது யார், எதற்காக கடத்தப்பட்டனர் என்ற விபரம் தெரியவில்லை. ஆனால் கடத்திய நபர் பயங்கர ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும், அவரை கண்டால் மக்கள் நெருங்கி செல்லாமல் தொடர்பு கொள்ளும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் 8 மாத குழந்தை உள்பட இந்திய வம்சாவளியினர் 4 பேர் கடத்தப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக