சனி, 11 ஜூன், 2022

லண்டன் தமிழ் பெண் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு – வவுனியாவில் சம்பவம்

May be an image of 2 people, people standing and outdoors

வீரகேசரி : வவுனியாவில் கிணற்றிலிருந்து இளம் குடும்ப பெண்ணின் சடலம் ஒன்று இன்று (10) இரவு 7.45 மணியளவில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பெண்ணின் கணவரும், இரு பிள்ளைகளும் லண்டனில் வசித்து வரும் நிலையில் கடந்த 7 மாதங்களுக்கு முன்னர் குறித்த பெண் லண்டனில் இருந்து வருகை தந்து வவுனியா, தோணிக்கல், ஆலடி வீதியில் வசித்து வந்த நிலையிலேயே அவரது சடலம் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
வீட்டில் இருந்த குறித்த பெண்ணை காணவில்லை என உறவினர்கள் தேடிய போது கிணற்றில் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
அப்பகுதி இளைஞர்கள், பொது மக்களின் உதவியுடன் சடலம் மீட்கப்பட்டதுடன், சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
30 வயதுடைய பெண்ணே இவ்வாறு மீட்கப்பட்டவராவார். அவரது சடலம் வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக