சனி, 11 ஜூன், 2022

கற்பழிப்பை லைவ் ஆக செல் போனில் ஒளி பரப்பிய கொடூரர்கள் .. மத்திய பிரதேசத்தில்

 மாலைமலர் :  இளம்பெண் கற்பழிக்கப்பட்ட காட்சியை வாலிபர் ஒருவர் செல்போனில் லைவ் ஆக காட்டிய அதிர்ச்சி சம்பவம்
மத்திய பிரதேச மாநிலத்தில் அரங்கேறி உள்ளது. காதலனும் அவனது நண்பரும் இளம்பெண்ணின் ஆபாச வீடியோவை மாப்பிள்ளை வீட்டாருக்கு அனுப்பி வைத்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாப்பிள்ளை வீட்டார் திருமணத்தை நிறுத்திவிட்டனர
போபால்: குவாலியூர் பகுதியை சேர்ந்த 18 வயது இளம்பெண் கடந்த ஆண்டு பள்ளியில் படித்துக்கொண்டு இருந்தாள்.
அப்போது அவளுக்கும் 20 வயது வாலிபருக்கும் இடையே காதல் மலர்ந்தது.
இருவரும் காதல் வானில் சிறகடித்து பறந்தனர். மேலும் மாலை நேரங்களில் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு சென்று உல்லாசமாக இருந்து வந்தனர். காதலன் மீது இருந்த நம்பிக்கையில் அவள் தன்னையே அவனிடம் ஒப்படைத்தாள்.


இது தான் அவளுக்கு வினையாக முடிந்தது. ஒருநாள் அந்த வாலிபர் காதலியை ஓட்டல் அறைக்கு அழைத்து சென்றான். அவனுடன் நண்பன் ஒருவனும் சென்றான். நண்பனுடனும் படுக்கையை பகிர்ந்து கொள்ளுமாறு காதலன் வற்புறுத்தினான்.

இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் இதற்கு உடன்பட மறுத்தாள். இதனால் 2 பேரும் சேர்ந்து அவளை பாலியல் பலாத்காரம் செய்தனர். இதையும் படியுங்கள்: ஜனாதிபதி தேர்தல் - எதிர்க்கட்சி தலைவர்களுக்கு மம்தா பானர்ஜி கடிதம் பின்னர் இந்த விஷயத்தை வெளியில் சொன்னால் உனது தந்தையையும், சகோதரரையும் கொன்று விடுவோம் என்று மிரட்டினார்கள். இதனால் பயந்து போன அந்த பெண் இதுபற்றி வெளியில் எதுவும் சொல்லாமல் மனசுக்குள்ளேயே வைத்து இருந்தார்.

இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட 2 பேரும் கடந்த ஒரு ஆண்டாக அவளை பாலியல் சித்ரவதை செய்து வந்தனர். மேலும் அதனை செல்போனில் வீடியோவும் எடுத்தனர். அதில் ஒருவன் அந்த பெண்ணை காதலன் கற்பழிப்பதை தனது நண்பர்களுக்கு செல்போனில் 'லைவ்' ஆக காட்டினான்.
இதனை அவர்கள் பார்த்து ரசித்து வந்தனர். அதை அறிந்த அந்த பெண் கடும் எதிர்ப்பு தெரிவித்தாள். ஆனால் ஆபாச வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட போவதாக மிரட்டி தங்களது ஆசைக்கு இணங்க வைத்தனர்.

இதனால் பயந்து போய் அவள் பெற்றோருக்கு கூட இதை சொல்லாமல் மறைத்து விட்டாள். இந்தநிலையில் அவளுக்கு பெற்றோர் திருமண ஏற்பாடுகளை செய்தனர். மாப்பிள்னை பார்த்து நிச்சயமும் செய்தனர். இந்த சூழ்நிலையில் இதை அறிந்த காதலனும் அவனது நண்பரும் இளம்பெண்ணின் ஆபாச வீடியோவை மாப்பிள்ளை வீட்டாருக்கு அனுப்பி வைத்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாப்பிள்ளை வீட்டார் திருமணத்தை நிறுத்திவிட்டனர். அதன் பிறகுதான் இளம்பெண்ணின் பெற்றோருக்கு இந்த விஷயம் தெரிந்தது. இதுதொடர்பாக அவர்கள் போலீசில் புகார் செய்தனர். போலீசார் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக