புதன், 1 ஜூன், 2022

தோழிகளின் காதலை பிரித்து வைத்த பெற்றோர் - சேர்த்து வைத்த நீதிமன்றம்... கேரளா

கலைஞர் செய்திகள்   : ஓரினச் சேர்க்கை காதலர்களுக்கு ஒன்றாகச் சேர்ந்து வாழக் கேரள நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
காதல் செய்த தோழிகள்.. பிரித்து வைத்த பெற்றோர் - சேர்த்து வைத்த நீதிமன்றம்: நடந்தது என்ன?
கேரளா மாநிலம் ஆலுவா பகுதியைச் சேர்ந்தவர் ஆதிலா. அதேபோல் கோழிக்கோட்டைச் சேர்ந்தவர் பாத்திமா நூரா. இவர்கள் இருவர் குடும்பமும் நட்பாகப் பழகி வந்துள்ளனர்.
இதையடுத்து தோழிகள் இருவரும் சவூதி அரேபியாவில் ஒன்றாகப் படிக்கச் சென்றுள்ளனர். அங்கு இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் லிவிங் டுகெதர் முறையில் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர்.
இது பற்றி அறிந்த இருவரது குடும்பமும் அவர்களைப் பிரித்துவைத்துள்ளது. பின்னர் இருவரும் வீட்டை விட்டு வெளியே தொண்டு நிறுவனம் ஒன்றில் தஞ்சம் அடைந்துள்ளனர். அப்போது அங்கு வந்த பாத்திமாவின் உறவினர்கள் அவரை கடத்தி சென்றுள்ளனர்.

பிறகு இது குறித்து ஆதிலா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் போலிஸார் விசாரணை நடத்தி வந்தனர். இதையடுத்து ஆதிலா கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், ஆதிலா நஸ்ரினும், பாத்திமா நூராவும் சேர்ந்து வாழலாம் என அதிரடியாக உத்தரவிட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக