விகடன் - சாலினி சுப்ரமணியம் : ``2024 மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க நுழைய முடியாது என்பதை நான் தெளிவாகக் கூறிக்கொள்கிறேன்'' என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்திருக்கிறார்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பா.ஜ.க-வுக்கு எதிராக ஒன்றிணைந்த எதிர்க்கட்சியை உருவாக்க பல முயற்சிகளை மேற்கொண்டுவருகிறார்.
`காங்கிரஸ் விரும்பினால் நாம் அனைவரும் இணைந்து 2024 பொதுத்தேர்தலில் போட்டியிடலாம். இப்போதைக்கு நேர்மறையாகவும் அமைதியாகவும் அடுத்து வரும் தேர்தல் பற்றிச் சிந்திப்போம்' என அண்மையில் மம்தா கூறியிருந்தார்.
இந்த நிலையில், மம்தா பானர்ஜி புருலியா மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு கட்சித் தொண்டர்களிடையே உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், ``2024 மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க நுழைய முடியாது என்பதை நான் தெளிவாகக் கூறிக்கொள்கிறேன்.
நான் யாருக்கும் பயப்பட மாட்டேன். மக்கள் நலனை உறுதிப்படுத்தும் விஷயத்தில் நான் முழு வலிமையுடன் போராடுவேன். எதிர்க்கட்சிகளின் வாயை அடைக்க பா.ஜ.க மத்திய புலனாய்வு அமைப்புகளைப் பயன்படுத்துகிறது.
மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு கலப்படம் செய்துவருகிறது. அழிவுகளை ஏற்படுத்தக்கூடிய பண மதிப்பிழப்பு போன்ற முடிவுகள் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை பா.ஜ.க அரசு சீரழித்துவிட்டது. இது ஒரு பெரிய ஊழல்'' என்றா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக