ஞாயிறு, 29 மே, 2022

மாநிலங்கள் அவையில் பாஜக பெரும்பான்மை இழக்கிறது! பெரிய கட்சியாக . ஒருமாதம் கூட நீடிக்க முடியவில்லை

 கலைஞர் செய்திகள்  : 15 மாநிலங்களில் நடைபெற உள்ள மாநிலங்களவை தேர்தலுக்குப் பிறகு பா.ஜ.கவின் மாநிலங்களவை உறுப்பினர் எண்ணிக்கை 100க்கு கீழ் குறைய உள்ளது.
தமிழ்நாடு உள்ளிட்ட 15 மாநிலங்களில் காலியாக உள்ள 57 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் ஜூன் 10ல் நடைபெறும் என மே 12ம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து இந்த 15 மாநிலங்களிலும் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் போட்டியிடுபவர்கள் தங்கள் வேட்பு மனுத்தாக்கல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், 30 ஆண்டுகளுக்குப் பிறகு 100 எம்.பி.க்களை கொண்ட சாதனையை பா.ஜ.க இந்த மாநிலங்களவை தேர்தல் இழக்க வாய்ப்புள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இது என்னவென்றால், 1990ம் ஆண்டு மாநிலங்களவையில், 108 காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் இருந்தனர். இதற்குப் பிறகு எந்த ஒருகட்சியும் இந்த அளவிற்குப் பெரும்பான்மையை பெறவில்லை.



இதையடுத்து 30 ஆண்டுகளுக்குப் பிறகு மாநிலங்களவையில் 100 உறுப்பினர்களைக் கொண்ட பெரிய கட்சியாக பா.ஜ.க உருவெடுத்தது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஏப்ரல் மாதம்தான் பா.ஜ.க மாநிலங்களவையில் 100 உறுப்பினர்கள் என்ற எண்ணிக்கையை எட்டியது.

இந்நிலையில், ஜூன் 10ல் நடைபெறும் மாநிலங்களவை தேர்தலில் பா.ஜ.கவின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 100க்கு கீழ் குறைய வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது. இதற்குக் காரணம் இந்த தேர்தலில் பா.ஜ.கவுக்கு 24 இடங்கள் மட்டுமே கிடைக்க வாய்ப்புள்ளது.

மேலும் சத்தீஸ்கர், ராஜஸ்தான், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா, ஆந்திரா ஆகிய ஆறு மாநிலங்களிலிருந்து பா.ஜ.கவுக்கு ஒரு இடம் கூட கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. மக்களவையில் பா.ஜ.கவிற்கு பெரும்பான்மை இருந்தாலும், மாநிலங்களவையில் பெரும்பான்மையை இழந்ததுள்ளது பா.ஜ.க.

இதனால் தான் பா.ஜ.கவால் மாநிலங்களவையில் எந்த திட்டத்தை அமல்படுத்தும்போது தொடர்ந்து பிரச்சனைகள் எழுந்து வருகிறது. தற்போது மேலும் பா.ஜ.கவின் மாநிலங்களவை உறுப்பினர் எண்ணிக்கை குறைய உள்ளது அக்கட்சிக்குப் பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
மேலும் 30 ஆண்டுகளுக்குப் பின்னர் பெற்ற சாதனையும் ஆட்சியிலிருந்தும் அவர்களால் தக்கவைத்துக் கொள்ள முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. 2024ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், 57 மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக