ஞாயிறு, 29 மே, 2022

மாநிலங்களவை வேட்பாளராக ப.சிதம்பரம்.. திமுக காங்கிரஸ் கூட்டணி சார்பில்

 நக்கீரன் செய்திப்பிரிவு :  நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் வரும் ஜூன் 10ஆம் தேதி நடைபெற இருக்கின்ற நிலையில் அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் தங்களது  வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டிருந்தது.
 இந்நிலையில் தமிழகத்திலிருந்து மாநிலங்களவைத் தேர்தலுக்கு காங்கிரஸ் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வேட்பாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
திமுகவுக்கு கிடைத்திருக்கும் நான்கு இடங்களில் ஒன்றை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்குவதாக திமுக அறிவித்திருந்தது. இந்நிலையில் மீதமுள்ள அந்த ஒரு இடத்தில் யார் காங்கிரஸ் சார்பில் யார் போட்டியிடுவார்கள் என கேள்வி எழுந்த நிலையில், தற்போது முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


திமுக சார்பில் கல்யாணசுந்தரம், ராஜேஷ்குமார், கிரிராஜன் ஆகியோர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக