புதன், 27 ஏப்ரல், 2022

முழு நேர இஸ்லாமிய பிரசாரகராக மாறிய சபரிமாலா

 Rishvin Ismath  :  அரபு நாட்டுக் கக்கூசுக்கு விளம்பரம் கொடுக்கும் தமிழ்நாட்டுச் சபரிமாலா – மதமாற்ற அஜெண்டாவின் நவீன விளம்பர மாடல்!
அரபு நாட்டு மதத்திற்கு அண்மையில் மதம் மாறியதாக அறிவித்த சபரிமாலா, அம்மதத்தின் விளம்பர மாடலாக மாற்றப்பட்டு, இஸ்லாத்தை விளம்பரப் படுத்துவதற்கான திட்டத்தில் பொய், புரட்டுக்கள் போதாது என்று அரபு நாட்டுக் கக்கூசையும் கூட விளம்பரப் படுத்தி வீடியோ வெளியிட்டு இருக்கின்றார்.
இதனை ‘சபரிமாலா ஒரு விளம்பரப் பிரியை’ என்பதாகவோ அல்லது அவரின் ‘தனிப்பட்ட ஆர்வக் கோளாறின் வெளிப்பாடாகவோ’ மட்டும் பார்த்துவிட்டு நகர முடியாது,


மாறாக அவரது விளம்பர நடவடிக்கைகளைச் சற்று உற்று நோக்கினால், இந்து மதத்தின் காரணமாக இந்தியாவில் நிலவும் சாதி அடிப்படையிலான ஏற்றத் தாழ்வையும், பொதுவிலேயே நிலவும் பாலியல் பாகுபாட்டையும் இலக்கு வைத்து தலித் மக்களையும்,
பெண்களையும் மதமாற்றம் செய்யும் திட்டத்துடன் காய் நகர்த்துகின்றார் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
பெப்ரவரி மாத இறுதிப் பகுதியில் அதிராம்பட்டினத்தில் உள்ள பள்ளிவாசளுக்குச் செல்லும் சபரிமாலா, பள்ளிவாசல் முன்னால் நின்று “நான் உம்ராவுக்கு (மக்கா) செல்ல இறைவனிடம் கேட்கின்றேன்” என்று சத்தமாக அல்லாஹ்வைப் பிரார்த்தித்து வீடியோ வெளியிடுகின்றார்.

அது தொடர்பாக அந்த வீடியோவை இணைத்து அப்பொழுதே ஒரு பதிவை எழுதி இருந்தேன்.
( https://www.facebook.com/rishvin/posts/10228237606388493 )

தனியாக அல்லாஹ்வைப் பிரார்த்தனை செய்கின்றவர்கள் அல்லாஹ் செவிடர் இல்லை என்று நம்புவதால் மெளனமாகவே பிரார்த்தனை செய்வார்கள், மற்றவர்களுக்குக் கேட்கும்படியாகச் சத்தமிட்டு பிரார்த்தனை செய்வதில்லை.
சபரிமாலா சத்தமிட்டுப் பிரார்த்திப்பது போல வீடியோ வெளியிட்டதன் காரணம் ஏமாளி முஸ்லிம்கள் அரேபியாவிற்குச் செல்ல பணம் தருவார்கள் என்பதற்காக என்று அப்பொழுது தோன்றினாலும், அதன் நோக்கம் அதுவல்ல என்று புரிகின்றது. சொந்தமாக லப்டப் வாங்கக் கூட பணமில்லாமல் முஸ்லிம்களிடம் பணம் கேட்ட சபரிமாலாவிடம் கையில் பத்தாயிரம் ரூபாய் கூட இல்லை என்று அவரது இணைப்பாளராகச் செயற்படும் பொள்ளாச்சி ஐக்கிய ஜமாத் கூட்டமைப்பின் செயலாளர் மெளலவி அல் ஹாபிழ் செய்யத் அவர்கள் சொல்லுகின்றார். கையில் பத்தாயிரம் ரூபாய் கூட இல்லாமல் பேஸ்புக்கில் மற்றவர்களிடம் உதவி கேட்டுக்கொண்டு இருந்த சபரிமாலா மக்காவுக்கு (அரேபியாவுக்குப்) போக துஆ (பிரார்த்தனை) பண்ணி ஒன்றரை மாதத்தில் அரேபியாவுக்கும் சென்று விடுகின்றார் என்றால்,‘பாருங்கள், சபரிமாலா அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தார், அல்லாஹ் பிரார்த்தனையை அங்கீகரித்ததால் தான் சபரிமாலா மக்கா சென்றார்’ என்று அப்பாவி மக்களை ஏமாற்றும் திரைக்கதை, வசனம், தயாரிப்பு என்பவை சபரிமாலாவின் நடிப்பின் பின்னணியில் உள்ளன என்பதில் சந்தேகமில்லை. கஃபாவை ஒரு தடவையாவது வாழ்க்கையில் தரிசித்து விட வேண்டும் என்று ஆண்டாண்டுகளாக அல்லாஹ்விடம் பிரார்த்தனை பண்ணி அதனைக் காணாமலே உயிரை விட்ட முதியவர்கள் ஒவ்வொரு சாதாரண முஸ்லிம் குடும்பத்திலும் இருப்பார்கள். செட்டிப்பட்டி, டொம்புச்சேரி, மீனாட்சிபுரம் என்று இதுவரை இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட மக்கள் அல்லாஹ்விடம் பிரார்த்தனை பண்ணினால் அவர்களுக்கு ஒன்றரை மாதத்தில் அரேபியாவுக்குப் போய்விட முடியுமா? சபரிமாலாவின் பின்னணியில் ஒரு மதமாற்ற அஜெண்டா உள்ளாது, அவர் விளம்பர மாடலாக சென்று இருக்கின்றார், அவ்வளவுதான்.
.
.
.வாழ்க்கையில் சுத்தமான கக்கூசையே காணாதவர் போன்று விளம்பரம் செய்யும் சபரிமாலா, மக்காவின் கக்கூசிற்கும் இஸ்லாத்திற்கும் என்ன சம்மந்தம் என்று சொல்லத் தவறிவிட்டாரா என்றால், இல்லை, மாறாக மக்கள் சிந்திக்க மாட்டார்கள், வீடியோவைக் காட்டி சரியான கழிப்பிட வசதி இல்லாத மக்களை இஸ்லாத்திற்கு மதம் மாற்றி விடலாம் என்ற நப்பாசைதான். மக்காவின் கழிப்பிடங்கள் முறையாக அமைக்கப் பட்டு இருக்கின்றன என்றால் அதற்கான காரணம் இஸ்லாமோ, அல்லாஹ்வோ அல்ல, மாறாக அந்த நாட்டிற்குக் கிடைக்கும் கச்சா / மசகு எண்ணெய் வருமானமும், ஹஜ்ஜு, உம்ரா யாத்திரைகள் மூலம் கிடைக்கும் வருமானமும் ஆகும் என்பதை பாமர மக்கள் சிந்திக்க மாட்டார்கள், அவர்களை ஏமாற்றி விடலாம் என்பதே சபரிமாலாவின் யாத்திரையை ஏற்பாடு செய்து சபரிமாலாவை மத விளம்பரத்திற்கு பயன்படுத்துகின்றவர்களின் திட்டம்.
.
.
மக்காவின் கக்கூசை விளம்பரம் செய்யும் சபரிமாலாவுக்கு இஸ்லாத்தின் இறைதூதர் முஹம்மது நபி எப்படி கக்கா போனார் என்பது தெரியுமா? முஹம்மது நபி கக்கா கழுவவில்லை என்பது சபரிமாலவுக்குத் தெரியுமா?
நபி(ஸல்) அவர்கள் மலம் கழிப்பதற்கு செல்லும்போது (சுத்தம் செய்ய) மூன்று கற்களைக் கொண்டு வரும்படி என்னிடம் கூறினார்கள்.(ஸஹீஹுல் புகாரி : 156)
முஹம்மது நபி கக்கா கழுவாதது மாத்திரமல்ல, மூத்திரத்தை என்ன செய்தார், அவர் எப்படியான பழக்கவழக்கம் உள்ளவராக இருந்தார் என்று அறிய : http://www.allahvin.com/2021/11/Urine.html
கொவிட் 19 இற்கு பிற்பட்ட காலம் என்பதால் தான் மக்காவின் கழிவறைகள் இப்படி இருக்கின்றனவே தவிர, ஹஜ்ஜுடைய காலத்தில் கஃபாவில், அரபாவில், முஸ்தலிபாவில் உள்ள கழிவறைகளைப் பயன்படுத்தியவர்களிடம் கேட்டுப் பாருங்கள், அந்தக் கழிவறைகளின் நிலைமை என்ன என்று தெரியும். மக்காவில் இருந்து தரைவழியாக மதீனா செல்லும் பொழுது உணவு, தொழுகை மற்றும் சிறு ஓய்வுக்காக வாகனத்தை (பேரூந்தை) நிறுத்தும் இடங்களில் உள்ள கழிவறைகளை எல்லாம் ஒரு தடவை வீடியோ போடச் சொல்லுங்கள், அவற்றின் யோக்கிதை தெரியும்.
.
..
பெண்விடுதலை என்று ஆரம்பித்த சபரிமாலா இன்று பெண் அடக்குமுறை மதத்திற்கு வெள்ளை அடித்து பொய்யைச் சொல்லி விளம்பரம் செய்கின்றார். சபரிமால எனதான் பொய்களைச் சொல்லி விளம்பரம் செய்தாலும், இஸ்லாத்தில் பெண்களின் நிலை இதுதான் :

allahvin.com/2021/03/women.html
இஸ்லாத்தில் பெண்களுக்கு சம அந்தஸ்து உள்ளது என்றால் ஆண்களுக்கு ஒரு பெண்ணால் ஜமாத் ஆக தொழுகை நடத்த முடியுமா? அவ்வளவு ஏன், சபரிமாலாவுக்கு ஏதாவது ஒரு பள்ளிவாசலில் ஒலிபெருக்கியில் தொழுகைக்கான அழைப்பு விடுக்க முடியுமா? இஸ்லாத்தில் மாதவிடாய் என்பது ஒரு தீண்டாமை இல்லை என்கின்றார் சபரிமாலா. இன்று உள்ள சுகாதார வசதிகளுடன் பெண் விரும்பினாலும் மாதவிடாய் நாட்களில் மக்கா பள்ளிவாசலில் நுழைந்து தொழுகையில் ஈடுபட முடியுமா? ஏன், தனது வீட்டில் கூட தொழுகையில் ஈடுபட பெண்ணுக்கு அனுமதி இருக்கின்றதா? இஸ்லாம் தெரியாத மக்களிடம் வேண்டுமானால் சபரிமாலாக்கள் பொய்களைச் சொல்லி மத வியாபாரம் செய்யலாம், அவ்வளவுதான். சபரிமாலாவின் ஏனைய பொய்களும் நேரம் கிடைக்கும் பொழுது தோலுரிக்கப்படும்.
(மக்கள் நலன் கருதி சில பொய்களை தோலுரிக்கும் பொழுது சில தகவல்களை பகிரங்கப் படுத்துவது தவிர்க்க முடியாதது ஆகிவிடுகின்றது, அவை தனிப்பட்ட விடயங்கள் அல்ல, மாறாக அத்தகவல்கள் பொது விடயம் சார்ந்தவையே என்பதைக் கவனத்தில் கொள்க.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக