செவ்வாய், 12 ஏப்ரல், 2022

ஓடும் பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட மாணவி.. ஈரோட்டில் பயங்கரம் சி சி தி வி காட்சிகள்..!

College student who fell from a moving bus in Erode
College student who fell from a moving bus in Erode

tamil.asianetnews.com - vinoth kumar  : ஈரோடு நாடார்மேடு எழில் விதியை சேர்ந்தவர் ஹர்சினி. இவர் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள கே.எஸ்.ஆர். தனியார் பொறியியல் கல்லுரியில் 3ம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 4ம் தேதி காலை வழக்கம்போல் கல்லூரி மாணவ, மாணவிகளை அழைத்துக் கொண்டு கல்லூரியை நோக்கி பேருந்து சென்றுக்கொண்டிருந்தது.
ஈரோட்டில் தனியார் கல்லூரி பேருந்தின் கதவு சரியாக மூடப்படாத நிலையில் பேருந்து வேகமாக வளைவு ஒன்றில் திரும்பும்போது கதவு திறந்துகொண்டு படிக்கட்டு அருகே நின்றிருந்த மாணவி சாலையில் விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.


 தனியார் கல்லூரி பேருந்து
ஈரோடு நாடார்மேடு எழில் விதியை சேர்ந்தவர் ஹர்சினி. இவர் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள கே.எஸ்.ஆர். தனியார் பொறியியல் கல்லுரியில் 3ம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 4ம் தேதி காலை வழக்கம்போல் கல்லூரி மாணவ, மாணவிகளை அழைத்துக் கொண்டு கல்லூரியை நோக்கி பேருந்து சென்றுக்கொண்டிருந்தது.

அப்போது, ஹர்சினி படியில் நின்றபடி பயணம் செய்ததாக கூறப்படுகிறது. நாடார்மேடு சாஸ்திரி நகர் வளைவில் பேருந்து அதிவேகமாக திரும்பியபோது கதவை சரியாக மூடாமல் படிக்கட்டில் நின்று ஹர்சினி நிலைதடுமாறி கதவின் மீது சரிய சரியாக மூடப்படாத கதவு திறந்துகொண்டு சாலையில் தூக்கி வீசப்பட்டார். இதில், கல்லூரி மாணவிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் வீடு திரும்பியுள்ளார்.


இந்த விபத்து குறித்து  சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்தும் விதமாக பேருந்தை அதிவேகமாக இயக்கிய ஓட்டுநர் செல்வகுமாரை பிடித்து விசாரித்து வருகின்றனர். கல்லூரி பேருந்தில் இருந்து மாணவி துக்கிவீசப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக