செவ்வாய், 12 ஏப்ரல், 2022

மலையக கவிஞர் எஸ்தர் : வெயிலோ மழையோ குளிரோ பாராது ...இதோ இன்று

May be an image of 7 people, people sitting and people standing
May be an image of 1 person and indoor

Esther Nathaniel :   இப்புகைப்படத்தை பார்த்தபோது அழுகை வந்துவிட்டது சிங்கள தமிழ் அரசியல்வாதிகளால் வெறும் காகிதத்தாலே ஆன வாக்குக்கும் பணத்துக்கும் இவ் அழகிய திருமொழி தேசத்தை எத்தனையோ காலம்அங்கே ஆடுபுலி ஆட்டத்தில் பாகடையாக்கினார்கள் பிரித்தாண்டார்கள் .
சிங்களவன் கெட்டவன் தமிழன் கொலைக்காரன் கொட்டீயா(புலி) முஸ்லிம்அய்யோ அவன் தொப்பிப்பிரட்டீ கடும் தீவிரவாதி குண்டு வைப்பவன் இதைத்தானடா உள்ளத்திலௌ கசப்பின் வேர்களை நாட்டினீர்கள்
இலங்கையின் முப்பது வருடகால கடூர யுத்தம் மகிந்த ராஜபக்சவினால் முடிவுக்கு வந்ததும் அவரை சிங்கள மக்கள் தெய்வமாக்கினார்கள்.
 தெருதெருவெங்கும் கட் வுட் பால்ச்சோறு தேநீர் தந்து தேசம் கொண்டாடித் தீர்த்தது .
எதுவரைக்கும் தன் வீட்டில் உள்ள வயதுப்போன தாய்க்கும் பாலகனுக்கும் பால்ச்சோறு அரிசி வாங்க சதொச வாசலில் கால்கடுக்க வரிசையில் நிற்கும் நிலை வரை.
கொழும்பு கொழும்பென்று கூலிக்காக வாழச் சென்ற சனம் அடுப்பெரிக்க முடியாது ஒரு சிகேஸ் வாங்க மாதக்கணக்காக காத்திருக்கும் வரை தேசம் சொல்லொண்ணா பஞ்சத்தில் நாடு விழுந்தது.


முன்னாள் பிரதமர் சிறீமா 1970 களில்  உள்ளூர் உற்பத்தியே உற்பத்தியென நாட்டை மூடியபோது மக்கள் பட்டினியில் செத்ததாக என் அம்மா சொன்னார்
பாண் ஒரு இறாத்தலுக்காக கொலை செய்யப்பட்டக் காலமது
சீத்தை புடவைகளை தைத்துப்போட்டுக்கொண்டு சாக்கில் காற்ச்சட்டைகளை தைத்துப்போட்டுக்கொண்டு தேயிலைக்காடுகளில் இத்தேசத்துக்கு மலைநாட்டு மக்கள் உழைத்தார்கள்.
 அவர்கள் தம் உழைப்பை வைத்துதான் இவ் தேசம் வாழ்ந்தது அவர்களுக்கோ துண்டூ நிலம்  சொந்தமில்லை வீடுமில்லை விலாசமுமில்லை இன்று வரை.
மகா வங்கியின் அறிக்கை வருடா வருடம் தேயிலையின் உற்பத்தி மட்டுமே ஒரே மட்டத்தில் நின்று தேசத்தின் பொருளாதாரத்தை கொண்டூ சென்றுள்ளதாக சாட்சி உள்ளது.கடைசியில் மக்களுக்கு பொருளுமில்லை புருசனுக்கு தாரமுமில்லை என்றானது.
தேசத்தின் யுத்தத்தை புலிகளை கொன்றொழித்து விடவேண்டுமென்ற வைராக்கிய எண்ணமூம் நாட்டின் கடனை  எப்பாடுபட்டாவது ஆயுதம் சேர்த்து அழித்தார்கள்.
 அப்பாவி மக்களும் குழந்தைகளூம் பெண்களும் தெரு தெருவாய் செத்தொழிந்தார்கள் அவர்களின் ஆன்மா சாகவேயில்லை காலீமுகத்திடலில் Go home Gota என்ற கடும் சினத்தோடு காற்றில் எங்கும் கத்திதிரிகிறது கூட்டத்தோடு கூட்டமாக...
இன்றுதான்  எதிர்கட்சி சொல்கிறது அதிகாரம் கொழித்த சனாதிபதி முறையை இல்லாதொழித்தாலே நாடு மீண்டும் உயிரைடையும் என
 இதைத்தானைய்யா நாங்களும் சொன்னோம் காதில் போட்டீர்களா ஆறு கடக்கும் வரைதானே அண்ணன் தம்பீ இந்த அதிகாரம் கொழித்த சனாதிபதி முறையால்  சிறுபான்மைக்கு சாதகமே என யாப்பு சொல்லுது சிறுபான்மைக்கு கிடைத்த சாதகம் என்ன?? வடக்கில் அப்பாவி தமிழன்ட அரை ஏக்கலர் நிலத்தை இராணுவத்திடமிருந்து பெற்றுத்தர முடியாத அதிகாரமாகாத்தான் இருந்தது வடக்கையும்  கிழக்கையும் புருசன் பொண்டாட்டியைப்போல் பிரித்தது விகிதாசர தேர்தலைக் கொண்டு வந்தது படு பயங்கரவிதி புலியும் தமிழனும் என பயங்கரவாத சட்டம் போட்டது அதில் ரோட்டில் போனவனை வந்தவனை நான்காம் மாடிக்கு ஏற்றியது அல்லது இல்லாதாக்கியது இதுவா சிறுபான்மைக்கு ஆதரவான சனாதிபதி அதிகாரம்
முழு உலக இலங்கையனும்  கோத்தபாய வீட்டுக்கு போ என ஆக்ரோசத்தோடு வீதிக்கு வந்துவிட்டார்கள் உயிரைக் கொடுத்து தேசத்தை மீட்டிட மக்களே உங்களோடு நாம் என்கிறது சர்வதேச இலங்கை.
இன்று காலிமுகத்திடலில் சாதி நிறம் இனம் குலம் கோத்திரம் சாத்திரம் எதுவுமின்றி கூடாரமிட்டுள்ளார்கள்.
எத்தனையோ ஹர்த்தால்களில் ஒருச் சிங்களவர் தமிழருக்காக தம் கடைகளை மூடவில்லை அப்பே சிங்க லே (சிங்கள இரத்தம்)என்று ஒரு கூட்டம் கத்தி திரிந்தது.
 இப்போ அந்த லே மாறி கோத்தா கோ கோத்தா கோ என்ற ஒரே இரத்தம் ஓரிரு மாதத்தில் சுரந்துவிட்டது காரணம் பசி பொருள் விலை அரிசி விலை நாட்டில் மின்சார இல்லை வீட்டில் அடுப்பு இல்லை.
எத்தனையோ பேர் தூக்கில் மாட்டி பசி ஆற்ற முடியாத கையறு நிலையில் உயிரை மாய்த்துக்கொண்டார்கள் ஆகவே சிங்க லே ஒரிஜினல் இலங்கை லேயாகியது.
நாம் பத்து நாளும் தண்ணீர் குடித்துவிட்டு இருக்கலாம் குழந்தைகள் பசி தாங்குமா ஆகவே மக்க வீதியில் கூடாரம் போட்டு கொழும்பில் தரித்துவிட்டார்கள்.
கலகம் பிறக்காது ஒரு தீர்வு எவ்வுலகிலும் இல்லை எஜமானர்களே உங்கள் நாய்களை பிடியுங்கள் இவ் அராஜக ஆட்சியை விட இவ் குளிர் கொடிதல்ல
இந்தப் போராட்டம் ஜனாதிபதி கோத்தபாயவுக்கு எதிரானது மட்டுமல்ல இத்தனைக்காலம் இந்நாட்டை பிரித்தாண்ட பல்வேறு கொடூர கேடுகெட்ட சிந்தனையால் பிரித்தாண்ட நரிப்புத்திக்கும் யாப்பினை பெரும்பான்மையை வைத்து பாராளுமன்றத்தில் எச்சியைத் தொட்டு தொட்டு அழித்து எழுதிய திருத்தத்துக்கும் பெரும் அதிகாரம் செறிந்த ஜனாதிபதி முறைமையை தங்களுக்கே சாதகமாக்கிக் கொண்ட கொடுங்கோன்மையின் பெருத்த தடித்த அதிகாரத்துக்குமே ஒன்றிணைந்த போராட்டம்.
இலங்கை ஆதிவாசி முதல் வீட்டுவாசி வரை இறங்கிவிட்டார்கள் கோத்தபாயதான் எம் இரட்சகன் என கும்பிட்டவர்கள் அவன் நாசமா போக என சிதறுதேங்காய் உடைத்து தங்களின் மனதை அறுத்து ஊற்றுகிறார்கள்
ஐனாதிபதியை கத்தரகம தெய்யோஎன்று வாக்களித்த பத்துலட்ச சிங்கள மக்கள் இப்போ கத்தரகம பிஸ்ஸோ எனக் கத்துகிறார்கள்
 முன்னாள் சனாதிபதி சந்திரிக்காவினால் கொண்டுவரப்பட்ட ராஜபக்சவின் ராஜாங்கம் சரிந்து மக்கள் மனங்களில் இவ் தேசத்தை நாமே கட்டவேண்டூமென்ற ராஜ யோசனைத்தான் எரிந்துக்கொண்டிருக்கிறது.
வெயிலோ மழையோ குளிரோ பாராது தியாகச்செம்மல்கள் இதோ இன்று சனாதிபதி செயலகம் முன்னே
காந்தி சொன்னார்
செய் அல்லது செத்து மடி
எஸ்தர்
மலையகம்
இலங்கை

1 கருத்து: