சனி, 30 ஏப்ரல், 2022

மகிந்த ராஜபக்சேவை பிரதமர் பதவியில் இருந்து நீக்க அதிபர் கோத்தபய ராஜபக்சே ஒப்புதல்

 தினத்தந்தி : இலங்கையில் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் நீடித்து வருகிறது. இந்நிலையில் நாடாளுமன்றத்தில் தனக்குப் பெரும்பான்மை இருக்கும் வரை தன்னை யாரும் பதவியிலிருந்து அகற்ற முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனநாயக நாட்டில் போராட்டங்கள் நடப்பது வழக்கம்தான் என்றும், போராட்டத்துக்காக அரசுகள் விலகுவதென்றால் எந்த அரசும் இந்த நாட்டில் இருக்க முடியாது.நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாவிட்டால் பதவி விலகப் போவதாக. ஜனநாயகத்துக்கு  முரணாக பதவியை பிடித்து வைத்திருக்கும் எண்ணம் கிடையாது என அவர் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் இலங்கையில் மகிந்த ராஜபக்சேவை பிரதமர் பதவியில் இருந்து நீக்க அதிபர் கோத்தபய ராஜபக்சே ஒப்புதல் என தகவல் வெளியாகி உள்ளது.



அதுபோல் இடைக்கால அரசி  அமைப்பதற்கு அதிபர் கோத்தபய  ராஜபக்சே  ஒப்புதல் அளித்து உள்ளதாக  நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன கூறியதாவது;-

அதிபர்  கோத்தபய ராஜபக்சவுடன் இன்று இடம்பெற்ற பேச்சுவார்த்தை வெற்றியடைந்துள்ளது. அனைத்துகட்சி  அரசின்  புதிய பிரதமர் மற்றும் புதிய அமைச்சரவையின் நியமனம் அனைத்துக் கட்சிகளின் தலைவர்கள் அடங்கிய தேசிய சபையிடம் ஒப்படைக்கப்படும் எனவும் அவர் கூறினார்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக