வெள்ளி, 15 ஏப்ரல், 2022

கர்நாடகா அமைச்சர், ஈஸ்வரப்பா ராஜினாமா : கான்ட்ராக்டர் தற்கொலை வழக்கில் சிக்கிய அமைச்சர்

 தினமலர் : கர்நாடக மாநில, கிராம மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் ஈஸ்வரப்பா,
அரசு கான்ட்ராக்ட் பணிகளுக்கு 4-0 சதவீத கமிஷன் கேட்டதாக, பிரதமர் மோடியிடம் புகார் செய்த கான்ட்ராக்டர் சந்தோஷ் பாட்டீல், 35, லாட்ஜ் ஒன்றில் துாக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தார்.
'என் மரணத்திற்கு அமைச்சர் ஈஸ்வரப்பா தான் காரணம்' என உறவினர்கள், நண்பர்களுக்கு அனுப்பிய 'வாட்ஸ் ஆப்' தகவலில் குறிப்பிட்டிருந்தார்.இதையடுத்து, அமைச்சர் தன் பதவியை ராஜினாமா செய்ய வலியுறுத்தி, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர் போராட்டம் நடத்தினர்.


நெருக்கடி முற்றியதால், உடுப்பி போலீஸ் நிலையத்தில் நேற்று (ஏப். 13) அமைச்சர் ஈஸ்வரப்பா மீது, தற்கொலைக்கு துாண்டியதாக போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.இந்நிலையில், ஈஸ்வரப்பா இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். நாளை கர்நாடக கவர்னரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக