சனி, 23 ஏப்ரல், 2022

தமிழக அரசு பணியில் போலி சான்றிதழ் அச்சடித்து சேர்ந்த வடமாநிலத்தவர்கள் .. 500 பேர் சிக்கினர்

”தமிழக அரசு பள்ளியில் இந்தியில் படித்து..” மண்டைல இருந்த கொண்டைய மறந்த வடமாநிலத்தவர்கள் சிக்கியது எப்படி?
கலைஞர் செய்திகள்  :தமிழக அரசு பள்ளியில் இந்தியில் படித்து..” மண்டைல இருந்த கொண்டைய மறந்த வடமாநிலத்தவர்கள் சிக்கியது எப்படி?
அஞ்சல் அலுவலகங்களில் பணியில் சேர 500க்கும் மேற்பட்டோர் போலி தமிழ்நாடு மதிப்பெண் சான்றிதழ்களை அச்சடித்திருப்பதை அரசு தேர்வுகள் துறை கண்டுபிடித்துள்ளது.
போலி தமிழ்நாட்டு மதிப்பெண் சான்றிதழைகளை அளித்து நாடு முழுவதும் ஒன்றிய அரசு பணிகளில் சேரும் வட மாநிலத்தவர்களால் அதிர்ச்சி அடைந்த தமிழ்நாடு அரசு தேர்வுகள் இயக்ககம்.
தமிழ்நாடு தேர்வுத்துறையின் அச்சிடப்பட்ட போலி மதிப்பெண் சான்றிதழ் அளித்து அஞ்சல் துறை உள்ளிட்ட ஒன்றிய அரசு நிறுவனங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வட மாநிலத்தவர் பணியில் சேர்ந்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
ஒன்றிய அரசின் அஞ்சல் துறை, எண்ணெய் நிறுவனங்கள், வங்கிகள் போன்றவற்றில் எழுத்துத்தேர்வு இல்லாமல் மதிப்பெண் அடிப்படையில் நிரப்பப்படும் தேர்வுகளுக்கு வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் போலி மதிப்பெண் சான்றிதழ்களை வழங்கி பணியில் சேர்ந்துள்ளனர்.

பணியில் சேர்ந்தவர்களின் சான்றிதழ்களை சரிபர்ப்பதற்காக அரசு தேர்வுத் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டபோது தொடர்ந்து அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி வருகின்றன.
”தமிழக அரசு பள்ளியில் இந்தியில் படித்து..” மண்டைல இருந்த கொண்டைய மறந்த வடமாநிலத்தவர்கள் சிக்கியது எப்படி?

போலி மதிப்பெண் சான்றிதழ்களில் முதன்மை மொழியாக இந்தி பெரும்பாலும் அச்சிடப்பட்டுள்ளது. மேலும் சான்றிதழில் கையொப்பமிட்ட அதிகாரியும் இந்தியிலும் கையெழுத்திட்டுள்ளனர். ஆனால், தமிழ்நாடு அரசு தேர்வுத் துறையால் வழங்கப்படும் மதிப்பெண் சான்றிதழ்களில் அதிகாரியின் கையொப்பம் தமிழ் மட்டுமே இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
”தமிழக அரசு பள்ளியில் இந்தியில் படித்து..” மண்டைல இருந்த கொண்டைய மறந்த வடமாநிலத்தவர்கள் சிக்கியது எப்படி?
இந்த நிலையில், உத்திர பிரதேச மாநிலம் தியோரியா மாவட்டத்திலுள்ள அஞ்சல் அலுவலகங்களில் 500க்கும் மேலானோர் போலி தமிழ்நாடு  மதிப்பெண் சான்றிதழ்களை கொடுத்து பணியில் சேர்ந்துள்ளனர் என்பது ஆய்வின் மூலம் அரசு தேர்வுகள் துறை கண்டுபிடித்துள்ளது.

இதுவரை 2,500 மதிப்பெண் சான்றிதழ்களை ஆய்வு செய்ததில் ஆயிரத்திற்கும் மேலானவை போலி என தெரியவந்துள்ளது. ஏற்கெனவே 300க்கும் மேற்பட்ட நபர்கள்  போலி மதிப்பெண் சான்றிதழ்கள் அளித்து தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநில அஞ்சல் அலுவலகங்களில் சேர்ந்து பணிபுரிந்து வந்தது  உறுதியானது.

அதில், பெரும்பாலான மதிப்பெண் சான்றிதழ்கள் உத்தர பிரதேச மாநிலத்தில் அச்சடிக்கப்பட்டு இருக்கலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்த மதிப்பெண் சான்றிதழ்கள் எழுத்து தேர்வு இன்றி மதிப்பெண்  அடிப்படையில் அஞ்சல் அலுவலகங்களில்  தேர்வு செய்யப்படும் பணிகளுக்காக போலியாக அச்சிடப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் தமிழ்நாடு போலி மதிப்பெண் சான்றிதழ்களை அளித்து பணியில் சேர்ந்த இருவர் கைது செய்து கர்நாடக காவல் துறை நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக