சனி, 23 ஏப்ரல், 2022

ஆப்கானிஸ்தான் மசூதியில் குண்டு வெடிப்பு 33 பேர் உயிரிழப்பு ..; Islamic State claims role

 மாலைமலர் : ஆப்கானிஸ்தான் மசூதியில் நடந்த குண்டுவெடிப்பில் 33 பேர் பலியாகியுள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் வெளியேறியதை தொடர்ந்து,
தலிபான்கள் தங்களது ஆதிக்கத்தை செலுத்தும்விதமாக தாக்குதல் நடத்தி பெரும்பாலான மாகாணங்களை தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது. br />கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர்.


இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் வடக்கு குண்டூஸ் மாகாணத்தின் இமாம் சாஹிப் மாவட்டத்தில் உள்ள மவுலவி செகந்தர் மசூதியில் நடந்த குண்டு வெடிப்பில் 33 பேர் கொல்லப்பட்டதாகவும், பலர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியானது.
இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு உடனடியாக மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலுக்கு எந்தக் குழுவும் இதுவரை பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக