செவ்வாய், 5 ஏப்ரல், 2022

அதானி உலகின் 10-ஆவது பெரும்பணக்காரர் ஆனார் .... முகேஷ் அம்பானியை முந்தினார்!

 தீக்கதிர் : புதுதில்லி, ஏப். 4 - அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி, உலக பணக்காரர்கள் தரவரிசையில் முகேஷ் அம்பானியை முந்தி, 10-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். உலகின் 100 பெரும்பணக்காரர் களின் பட்டியலை, புளூம்பெர்க் நிறு வனம் (BLOOM BERG BILLIONAIRES INDEX) வெளியிட்டுள்ளது. இதில், உலகின் முதல் 10 பணக்காரர்கள் தரவரிசையில், இந்தியாவைச் சேர்ந்த கவுதம் அதானி 10-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். இதற்கு முன்பு அந்த  இடத்திலிருந்த ரிலையன்ஸ் இண்டஸ் ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியை அவர் 11-ஆவது இடத்திற்கு தள்ளியுள் ளார். பட்டியலில் ‘டெஸ்லா’வின் எலான் மஸ்க் 273 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உலகின் நம்பர் ஒன் பணக்காரராகத் தொடர்கிறார். அமேசான் நிறுவனத் தலைவர் ஜெப் பெஸோஸ் 188 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். 

100 பில்லியன் டாலர் (சுமார் ரூ. 7 லட்சத்து 60 ஆயிரம் கோடி) சொத்து மதிப்புடன் கவுதம் அதானி (அதானி குழுமம்) 10-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். 99 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் முகேஷ் அம்பானி (ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்) 11-ஆவது இடத்திற்கு இறங்கியுள்ளார். 59 வயதான அதானி குழுமத்தின் தலைவரான கவுதம் அதானி, இந்தி யப் பிரதமர் நரேந்திர மோடியின் மிக நெருங்கிய நண்பர். மோடி கடந்த 2014-இல் ஆட்சிக்கு வந்தபின், கடந்த 8 ஆண்டுகளில், இந்தியாவின் துறை முகங்கள், சுரங்கங்கள், இயற்கை எரி வாயு உள்ளிட்ட பல்வேறு தொழில்களி லும் ஏகபோகம் செய்துவரும் அவர், கடந்த ஆண்டில் மட்டும் தனது நிகர சொத்து மதிப்பில் 23.5 பில்லியன் டாலர்களை சேர்த்துள்ளார். அதே நேரத்தில், அம்பானி தனது நிகர மதிப்பில் 99 பில்லியன் டாலரை விட குறையத் தொடங்கியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக