விஜய் : 2014-ல் இந்தியா முழுவதும் மோடி அலை வீசிய போது கூட பஞ்சாபில் அருண் ஜெட்லியை எதிர்த்து போட்டியிட்ட அமரீந்தர் சிங் 1 லட்சம் ஓட்டு வித்யாசத்தில் வெற்றி பெற்றார். 2017- ம் ஆண்டு அவரை முதல்வர் வேட்பாளராக அறிவித்து காங்கிரஸ் கட்சி சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றது. எந்த ஒரு ஊழல் குற்றச்சாட்டும் இல்லாமல் சிறப்பாக ஆட்சி செய்து கொண்டிருந்தார் அமரீந்தர் சிங். நவ்ஜோத்சிங் சித்து பேச்சை கேட்டு அவரை மாற்றி சன்னியை முதல்வராக்கி பிறகு அமரீந்தரர் சிங் கட்சியை விட்டு விலகி தனிக்கட்சி தொடங்கி இன்று அவரும் தோற்று காங்கிரஸ்ம் தோற்று விட்டது.
உத்தராகண்ட், கோவா எல்லா மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி தோற்க காரணம் கோஷ்டி பூசல் தான். உத்தராகண்டில் ஒரே வருடத்தில் 2 முதல்வர்களை பாஜக மாற்றியிருக்கிறது. இப்போது முதல்வராக இருக்கும் புஷ்கர் சிங் தாமி தோல்வியடைந்திருக்கிறார் எனினும் உத்தராகண்டை பாஜக தக்க வைத்து விட்டது.
பாஜகவில் எவ்வளவு உட்கட்சி பிரச்சனை இருந்தாலும் அவர்கள் அத்தனை பேரும் RSS -ன் பேச்சுக்கு கட்டுப்படுவார்கள். முதல்வர் பதவியை விட்டு விலகுங்கள் என்று எடியூரப்பாவை கேட்ட போது அவர் ஒரு வார்த்தை கூட பேசாமல் பசவராஜ் பொம்மைக்கு வழி விட்டார். இது தான் பாஜக. இந்த ஒற்றுமையெல்லாம் காங்கிரஸ் தலைவர்களுக்கு ஒரு நாளும் வராது.
ஆகச் சிறந்த முற்போக்குவாதியாக இருந்த குஷ்பூவை கூட பாஜக சங்கியாக மாற்றி வைத்திருக்கிறது. பாஜக தலைவர்களுக்கு தனிப்பட்ட கருத்து, அகில இந்திய கட்சியின் நிலைப்பாடு, மாநில கட்சியின் நிலைப்பாடு என்று தனித்தனியாக எந்த நிலைபாடுகளும் கிடையாது. அவர்களுக்கு RSS என்ன சொல்கிறதோ அது தான் வேதவாக்கு.
காங்கிரஸ் கட்சிக்கு அப்படியல்ல. காங்கிரஸ் காரியக் கமிட்டி ஒரு கொள்கை முடிவெடுத்தால் அதற்கு நேர் மாறாக சசி தரூர் ஒன்றை சொல்வார் அதற்கு நேர் மாறாக கேரள மாநில காங்கிரஸ் கட்சி தலைமை ஒன்று செல்லும் கேட்டால் உட்கட்சி ஜனநாயகம் என்று சொல்வார்கள். இவ்வாறு கட்சிக்குள்ளேயே கருத்தொற்றுமை இல்லை என்றால் மக்கள் எப்படி காங்கிரஸ் கட்சியை நம்புவார்கள்?
தன்னுடைய வாக்கு வங்கி எது என்று பாஜக தெரிந்து வைத்திருக்கிறது. பாஜகவுக்கு எல்லாருடைய வாக்குகள் தேவை இல்லை. அவர்களுடைய வாக்கு வங்கியை அடையாளம் காண்கிறார்கள் அவர்களை திருப்தி படுத்த என்ன செய்ய வேண்டுமோ அதை செய்கிறார்கள். CAA, Article 370, Triple talaq, ராமர் கோயில், Hijab இவையெல்லாம் தான் அதற்கு உதாரணங்கள். அவர்களுடைய கொள்கையை மூர்கத்தனமாக நடைமுறைபடுத்துகிறார்கள். அது அவர்களுக்கு வெற்றியை தேடித் தருகிறது.
காங்கிரஸ் கட்சிக்கு அதே போல் targeted vote bank என்று எதுவும் இருக்கிறதா? பாஜகவுக்கு RSS,VHP, ABVP, பஜ்ரங் தல் என்று தேர்தலில்இறங்கி வேலை செய்ய பல அமைப்புகள் இருக்கிறது. காங்கிரஸ் கட்சிக்கு அப்படி எதுவும் frontal organizations இருக்கிறதா? இது போல காங்கிரஸ் கட்சி செயல்படும் முறையிலே ஆயிரத்து எட்டு குறைப்பாடுகள் இருக்கிற போது வெறுமேனே மக்களை மட்டும் குறை சொல்லி என்ன பயன்?
- விஜய்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக