வெள்ளி, 18 மார்ச், 2022

தேசிய பங்குச்சந்தை ஊழல் என்பது என்ன? NSE -எனப்படும் National stock exchange

May be an image of 3 people

பொருளாதார அறிஞர்-ஆனந்த சீனுவாசன்  : தேசிய பங்குச்சந்தை ஊழல் என்பது என்ன?
என்னால் முடிந்த அளவு எளிமையாக இது பற்றி விளக்குகிறேன்::---
NSE -எனப்படும் National stock exchange,,
பேப்பரில் அனைத்து Stock exchange முறைகளும் பாண்டு பேப்பரின் வழியே நடந்து கொண்டிருந்த போது அதை
ஆட்டோமேட்டிக் டிஜிட்டல் முறையை உருவாக்கியவர்களில் மிக முக்கியமானவர்கள் இருவர்
ரவிநாராயணண்
சித்ராராமகிருஷ்ணன்
இதில் ரவிநாராயணண் என்பவர் தான் 2011-வரை NSE ன் CEO வாக இருந்திருக்கார்
மும்பையில் உள்ள இதன் தலைமை அலுவவகத்தில் இருக்கும் Mainframe_computer மூலமாகத்தான் ஒரு நாளைக்கு பல லட்சம் கோடி பரிவர்த்தனை இந்த NSE ல் நடக்கிறது...


பங்குச்சந்தையில் பங்குகளின் மதிப்பு ஏறும்.
திடீரென்று இறங்கும்...
அப்படி மாறும் பங்குச்சந்தை நிலவரங்களை உடனுக்குடன் பங்குதாரர்களுக்கு NSE ல் இருந்து தெரிவிக்கப்பட வேண்டும்.
ஒருவேலை யாரோ ஒருவருக்கு மட்டும் அடுத்த 5-நிமிடத்தில் மார்க்கெட் என்னவாக மாறப்போகிறது என்று தெரிந்தால் அதில் மட்டும் பங்குகளை முதலீடு செய்து பல லட்சம் கோடிகளை சம்பாதிக்கலாம்..
அதை அறிந்துக் கொள்ள மும்பையில் இருக்கும் NSE அலுவலகத்தில் உள்ள MAIN FRAME SERVER க்கு அருகாமையில் நாம் நம்முடைய தனிப்பட்ட SERVERயை வைத்து டேட்டாவை முதல் ஆளாக பெறுவதன் மூலம் மற்ற பங்குதாரர்களுக்கு பங்குசந்தை நிலவரம் தெரிவதற்கு முன்பே நாம் அதை தெரிந்துகொள்ளலாம்..
அதைதான் செய்து 5-லட்சம் கோடிக்கும் மேல் லாபம் பார்த்து பணத்தை ஊழல் செய்து  உள்ளனர் இந்த மயிலாப்பூர் கும்பல்
Main frame serverயை -LOCATION என்றும்
பக்கத்தில் வைக்கப்பட்ட தனிப்பட்ட Serverயை -COLOCATION என்றும் அழைப்பர்..
ஆகையால் தான் இந்த ஊழலை Colocation scam என்று அழைக்கின்றனர்..
இப்படி ஒரு பங்குச்சந்தை ஊழல் நடைபெற்றதுனு 2016-ல் சிங்கப்பூரை சார்ந்த ஒரு கம்பெனிதான் வெளிச்சம் போட்டு காட்டியது...
அதை SEBI -securities and exchange board of india அமைப்பு விசாரிக்க தொடங்கியதும்..விசாரனை நடைபெறாது தடுக்க பல தடைகள் வந்தது.
சொல்லப்போனால் குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்யும் அதிகாரம் படைத்த SEBI அமைப்பு, குற்றவாளியான NSE யிடமே என்ன தவறு நடந்த்து என்று அறிக்கை தர சொல்லி கேட்டது.
எங்காவது போலிஸ் திருடனை விசாரிக்கையில் "ஏதாவது திருட்டு நடந்துச்சா தம்பி?" என்று அறிக்கை தரச்சொல்லி கேட்குமா?
NSE தன் பங்குக்கு தேசிய மேலாண்மை நிறுவனத்திடம் இது குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை தர சொல்கிறது. இந்த நிறுவனத்திற்கு நிதி வழங்குவதே NSE தலைமைதான் என்றால் எப்படி உண்மையான அறிக்கை வரும்?
"சார், நான் திருடவேயில்லை சார், வேணும்னா என் மச்சானை கேட்டு பாருங்க"
ஒரு பிக்பாக்கெட் திருட்டை கூட இதை விட வேகமாக ஆழமாக விசாரித்திருப்பார்கள். ஆனால் இவ்விசாரனை அவ்வளவு மந்தமாக செல்கிறது.
காரணம் NSE ன் தலைமை பொறுப்பில் இந்தியாவின் முக்கிய புள்ளிகள் இருந்துவருகின்றனர்...Supreme court judge, முன்னாள் ஆளுநர்கள்,பெரிய காவல்துறை அதிகாரிகள் என..
ஆனால் இது குறித்து நடவடக்கை எடுக்காமல் இருந்த CBI
பல புற அழுத்தத்தால் மற்றும் SEBIன் ஆதாரங்களை ஏற்று CBI 2018ல் ஒரு குற்றப்பத்திரிக்கையை பதிவு செய்கிறது..
NSE ன் முந்தைய  CEO சித்ராராமகிருஷ்ணன்
VICE CHAIRMAN ரவி நாராயணன்
மற்றும் ஆலோசகர்
ஆனந்த் சுப்ரமணியம்...
இவர்கள் மூவரும் இணைந்துதான் இந்த Scam யை செய்துள்ளார்கள்....
தற்போது கைது செய்யப்பட்டிருக்கும் இவர்களிடம் முறையான விசாரணை நடைபெற்றாலே குறைந்தது 5-லட்சம் கோடி நேரடியாக ஊழல் செய்து கொள்ளையடித்த பணத்தின் மொத்த விவரத்தையும் கைப்பற்றலாம்..
இந்த ஆனந்த் சுப்ரமணியம், சித்ராவிற்கு வேண்டப்பட்டவர் என்பதால் எந்த வழக்கமான நடைமுறையையும் பின்பற்றாமல் நேரடியாக மாதம் 6 கொடி சம்பளத்திற்கு தன் ஆலோசகராக நியமித்துக் கொண்டார் சித்ரா.
இந்த ஆனந்த் என்பவரின் மின்னஞ்சல் வழிதான் அனைத்து தகவல்களும் பரிமாறப்பட்டிருக்கின்றன. புத்திசாலித்தனமாக நினைத்துக்கொண்டு தன் லேப்டாப்பை உடைத்து விட்டால் தப்பி விடலாம் என நினைத்திருக்கிறார். ஆனால் சிபிஐ சர்வரில் இருந்து அனைத்து ஆதாரத்தையும் எடுத்து விட்டது.
2018-ல் வழக்கு பதிந்த CBI 2022-ல் தான் நடவடிக்கைக்கே வந்துள்ளது...ஒரே காரணம் மோடி அரசின் துணையும்...நூல் இழை சாதிப்பாசமுமே.....
என்ன செய்யபோகிறது இந்திய சமூகம்..இத்துனை பெரிய ஊழல்வாதிகளை..
2G குற்றச்சாட்டு என்பது ஊழல் அல்ல அது அலைகற்றை டெண்டரில் நிகழ்ந்த இழப்பு என்பதை மறைத்து 1.5-லட்சம் கோடி ஊழல்..
பணத்தை அண்ணன் ஆ_ராசா வெளிநாட்டில் பதுக்கிட்டார்னு கத்திய ஒரு கும்பல் அவரை கைது செய்து திகாரில் அடைத்தனர்...
விசாரணைக்குனு போன  கனிமொழியை கைதும் செய்தது..
இதோ கிட்டதட்ட 5-லட்சம் கோடி பணத்தை வாரி சுருட்டி இருக்கிறது இந்த மயிலாப்பூர் கும்பல்..ஆனாலும் ஒருத்தன் வாயை திறப்பதில்லை...காரணம் நூல்பாசம்...
இதை படிப்பவர்களுக்கு இரண்டு கேள்விகள் எழலாம்.
1) அதேன்ன மயிலாப்பூர் கும்பல்?
இவர்கள் மயிலாப்பூர் ஆழ்வார்ப்பேட்டையில்தான் குடியிருக்கிறார்கள். இதுவரை அனைத்து ஊழல்களுக்கு எதிராக ஊளையிட்டு ஊரைக்கூட்டும் சக மயிலை வாசிகள் இதுவரை வாய் திறவாமல் இருப்பதால் மொத்தமாக கும்பல் என்கிறோம்.
2) பங்குச்சந்தை என்றாலே இப்படித்தான். எனக்கும் அதற்கும் சம்பந்தமில்லை, என்னிடம் ஏன் அதை சொல்கிறீர்கள்?
மக்களின் பணம்தான் அங்கு இருப்பது. நீங்கள் இன்சூரன்ஸ் போட்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் யாருக்கேனும் பிஎஃப் பிடிக்கிறார்களா? அத்தனையும் பங்குச்சந்தையில்தான் முதலீடு செய்யப்படுகிறது. இவர்கள் திருடியது தனியார் நிறுவனத்தின் பணத்தையல்ல. அரசாங்கத்தின் மக்களின் பணம்.
இதை யாரும் பேசமாட்டார்கள். நாம்தான் பேசவேண்டும். கண்ணில் தென்படும் ஊழல் எதிர்ப்பு போராளிகளிடம் இது குறித்து கேள்வி கேளுங்கள்.
மேலதிக எளிமையான தகவல்களுக்கு வீடியோ இணைப்பு கமெண்டில் தரப்பட்டுள்ளது.
அனைவரும் பகிருங்கள்..  
தகவல்களுக்கு நன்றி
TAMILKURAL -செந்தில்வேல்
பொருளாதார அறிஞர்-ஆனந்த சீனுவாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக