வெள்ளி, 25 மார்ச், 2022

மகள் கண்ணெதிரில் இயற்கைக்கு மாறான உடலுறவு.. சைகோ .. மனைவியின் விருப்பம் இல்லாமல் உடலுறவு மேற்கொள்வது பலாத்காரம்

 tamil.asianetnews.co -  Ezhilarasan Babu  : மனைவியிடம் தவறாக நடந்து கொள்ளும் கணவன் விஷயத்தில் மட்டுமே இந்த உத்தரவுகளை வழங்குகிறோம் என நீதிபதி குறிப்பிட்டார். இந்த சமூகத்தில் ஒரு கணவரோ அல்லது வேறு யாரோ கற்பழிப்பு குற்றச்சாட்டுகளில் அலட்சியமாக இருக்கக் கூடாது. அவ்வாறு செய்வது சட்டத்தின்முன் சமத்துவமின்மையை வெளிப்படுத்துவது மட்டுமல்லாமல் அரசியலமைப்பை மீறுவதாகும் என அமர்வு முக்கிய கருத்துக்களை தெரிவித்தது.
தாலி கட்டிய கணவனாகவே இருந்தாலும் மனைவியின் விருப்பம் இல்லாமல் உடலுறவு மேற்கொள்வது பலாத்காரம் தான் என பெங்களூரு உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. தன் மீது மனைவி கொடுத்த பலாத்கார வழக்கை ரத்து செய்ய வேண்டுமென கணவன் தாக்கல் செய்த மனு மீது நீதிமன்றம் இவ்வாறு கருத்துக் கூறியுள்ளது. இந்த வரலாற்று சிறப்பு மிக்க உத்தரவை கர்நாடக உயர்நீதி மன்றம் வழங்கியுள்ளது.



திருமண வாழ்க்கையில் கட்டாய உடலுறவை குற்றமாக கருத வேண்டுமா? என்பது குறித்து தீவிர விவாதம் நடந்து வருகிறது. இது தொடர்பான வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. திருமணம் ஆனது முதல் தனது கணவர் தன்னை பாலியல் அடிமையாக பார்ப்பதாகவும், மனிதாபிமானமற்ற முறையில் நடந்து கொள்வதாகவும், ஒரு கட்டத்தில் தன் மகளுக்கு முன்பாக இயற்கைக்கு மாறான உடலுறவு கொள்ள வற்புறுத்தியதாகவும் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் நீதிமன்றத்தில் புகார் தெரிவித்தார். எனவே தன் கணவன் மீது பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் அவர் முறையீடு செய்தார். இதே நேரத்தில் ஐபிசி 375 ஆவது பிரிவின் கீழ் தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என கணவர் நீதிமன்றத்தில் எதிர் மனு தாக்கல் செய்தார்.

Sex like an animal in front of Daughter .. Wife screaming by psycho husband .. Court excellent Order

இந்த வழக்கை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம் பல அதிரடி உத்தரவை வழங்கியுள்ளது. நீதிபதி நாக பிரசன்னா, பல்வேறு கருத்துக்களை தெரிவித்துள்ளார்.  கணவன் மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுப்பது அவளது மனநிலையை கடுமையாக பாதிக்கும், கணவன்மார்களின் இதுபோன்ற கோமாளித்தனங்கள் மனைவிகளின் ஆன்மாவில் அழியாத வடுக்களை ஏற்படுத்தி விடும். ஆணாதிக்க கணவன்மார்கள் தங்கள் மனைவிகளை பாலியல் அடிமைகளாக நினைக்கிறார்கள்,  மனைவிகளின் உடல் மனம் மற்றும் ஆன்மாவை அடக்க வேண்டும் என்ற எண்ணம் வலுவாக வேரூன்றி இருப்பதாக நீதிபதி கருத்து தெரிவித்தார். திருமணம் என்பது மனிதனில் உள்ளது மிருகத்தை வெளியே கொண்டு வருவதற்கும், மனைவிகளை உடல் ரீதியாக  துன்புறுத்துவதற்குமான ஒரு உரிமம் அல்ல. எனவே மனைவியுடன் வலுக்கட்டாயமாக உடலுறவு வைத்து, அவளை பாலியல் அடிமையாக பார்க்கும் கணவன்மார்களை இந்த வழக்கில் இருந்து விடுவிக்க முடியாது எனக் கூறிய அவர் அம்மனுவை தள்ளுபடி செய்தார்.

Sex like an animal in front of Daughter .. Wife screaming by psycho husband .. Court excellent Order

பலாத்காரம் என்பது கணவன் தன் மனைவி மீதான பாலியல் வன்கொடுமை கற்பழிப்பை கருத்தில்கொள்ள ஒரு குறிப்பிட்ட சட்டம் இல்லாமல் இருக்கலாம், இருப்பினும் விதிவிலக்குகள் உள்ளன. சில ஆண்டுகள் பழமையானவைகளை  நீதிபதிகள் குறிப்பிட்டனர். குற்றவியல் கோர்ட் சட்டங்கள் இதில் பிரிவுகள் எப்போதும் உள்ளன. சுதந்திரம் அடைந்ததிலிருந்து அரசியலமைப்பை  பின்பற்றி வருகிறோம், சமத்துவம் அவற்றில் ஒன்றாக உள்ளது, என் பார்வையில்  மனிதன் என்றால் எல்லோரும் மனிதர்கள் தான், எல்லோருக்கும் ஒரே சட்டம்தான், யார் செய்தாலும் பலாத்காரம் பலாத்காரம் தான் என நீதிபதி கூறினார். தாம்பத்திய வாழ்க்கையில் பாலுறவை கட்டாயப்படுத்துவது கடுமையான குற்றமாக கருதப்படும். அதைப்பற்றி விவாதிக்க துணியவில்லை ஏனென்றால், அது சட்டமன்றம் சம்பந்தப்பட்ட விஷயம்.

Sex like an animal in front of Daughter .. Wife screaming by psycho husband .. Court excellent Order

மனைவியிடம் தவறாக நடந்து கொள்ளும் கணவன் விஷயத்தில் மட்டுமே இந்த உத்தரவுகளை வழங்குகிறோம் என நீதிபதி குறிப்பிட்டார். இந்த சமூகத்தில் ஒரு கணவரோ அல்லது வேறு யாரோ கற்பழிப்பு குற்றச்சாட்டுகளில் அலட்சியமாக இருக்கக் கூடாது. அவ்வாறு செய்வது சட்டத்தின்முன் சமத்துவமின்மையை வெளிப்படுத்துவது மட்டுமல்லாமல் அரசியலமைப்பை மீறுவதாகும் என அமர்வு முக்கிய கருத்துக்களை தெரிவித்தது. அரசியலமைப்பு சட்டம் எல்லோருக்கும் சமம் குற்றம் யார் செய்தாலும் குற்றமே. இதில் கற்பழிப்பு பிரிவு ஒன்றும் விதிவிலக்கல்ல என்ற நீதிபதி நாக பிரசன்னா திருமண பலாத்காரத்தை பலநாடுகள் அங்கீகரிக்கின்றன என்று குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக