வியாழன், 24 மார்ச், 2022

அந்த ஐந்து கட்சி கூட்டணி செய்த பச்சை துரோகம் .. வரலாறு


 LR Jagadheesan 
:  அனுபவஸ்தர் சொன்னா சரியாத்தான் இருக்கும்.
தமிழ்நாடு இன்றைக்கு இப்படி நாசமாவதற்க்கு முழு முதல் காரணமே இந்த ஐந்து பேர் செய்த கூட்டுச்சதி தானே.
ஸ்டாலின் ஆணவத்துக்கு பழிதீர்ப்பதாக சொல்லி ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் சீரழித்த கும்பல் இந்த சதிகார கும்பல். நியாயமாய் இந்த ஐந்துபேரும் தமிழக வாக்காளர்களிடம் முதலில் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும்.
பிகு: அப்ப ஸ்டாலின் ஆணவத்துக்கு கண்டனமில்லையா என்று நீட்டிமுழக்க வரும் நடுநிலை நல்லவர்களுக்கு இரண்டு பதில்கள்.
அதை அப்போதே கண்டித்து எழுதியிருக்கிறேன் என்பது முதல் பதில்.
இரண்டாவது பதில் ஸ்டாலினைவிட ஆயிரம் மடங்கு ஆணவத்துடன் இவர்களை நடத்திய ஜெயலலிதாவிடம் இந்த ஐவரும் எப்படி பம்மிப்பதுங்கிக்கிடந்தார்கள் என்பதற்கு சம்பவரீதியாக சாட்சிகள் இருக்கின்றன/. ஜெயலலிதாவின் அதிமோசமான ஆணவத்தை பொறுத்துக்கொள்ள முடிவதும்.
அதைவிட குறைவான ஆணவம் ஸ்டாலினிடம் வெளிப்பட்டால் அதற்கு எதிராக பொங்கி எழுவதிலும்.
 உள்ள உளவியலை ஆராயப்புகுந்தால் நம் அனைவரின் ஆழ்மன ஜாதிய உளவியல் அழுக்குகளை அலசுவதில் போய் நிற்கும்.

எனவே இவர்களின் நோக்கம் ஸ்டாலினின் ஆணவமோ அல்லது தங்களின் சுயமரியாதையோ அல்ல.
திமுக ஆட்சிக்கு வரக்கூடாது. ஸ்டாலின் முதல்வராகக் கூடாது என்பது மட்டுமே இவர்களின் ஒரே நோக்கம். அதற்கான தனிமனித வஞ்சம் தீர்ப்பே மநகூ. அதற்கான ஒட்டுமொத்த விலையையே தமிழ்நாடு கொடுத்துக்கொண்டிருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக