வியாழன், 24 மார்ச், 2022

வைகோ தலைமையில் பொதுக்குழுக் கூட்டம் - புறக்கணித்த மதிமுக நிர்வாகிகள்

 நக்கீரன்  : மதிமுகவின் 28ஆவது பொதுக்குழுக் கூட்டம் பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் சென்னையில் இன்று கூடியது.
 இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் இந்தப் பொதுக்குழுக் கூட்டத்தில் மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், தலைமைக்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். தமிழக அரசியல் சூழல் மற்றும் கட்சியின் அடுத்தகட்ட வளர்ச்சி குறித்து இன்றைய கூட்டத்தில் ஆலோசனை நடைபெறுகிறது.
இந்த நிலையில், இன்று நடைபெறும் கூட்டத்தை மதிமுகவின் அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி, சிவகங்கை, விருதுநகர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களின் மாவட்டச் செயலாளர்கள் புறக்கணித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக