Vijayasankar Ramachandran : தேங்க் யூ பெஹன்ஜி!
வரவிருக்கும் ஃபிரண்ட்லைன் இதழில் பத்திரிக்கையாளர் நளின் வர்மா எழுதியிருக்கும் கட்டுரையிலிருந்து சில துளிகள்:
பிஎஸ்பி தொண்டர் ரன்வீர் ஜாத்தவ்: “தேர்தலில் பஹுஜன் சமாஜ் கட்சிக்கு ஆதரவாகர் இருங்கள் என்று சொன்ன பெஹன்ஜி (மாயாவதி), எங்கெல்லாம் சமாஜ்வாதி கட்சி தேர்தல் களத்தில் முன்னணியில் இருக்கிறதோ அங்கெல்லாம் நாம் பிஜேபிக்கு வாக்களிக்க வேண்டும்.
பட்டதாரி இளைஞரான முகேஷ் குமார்: “எங்கள் தொகுதியில் சமாஜ்வாதி கட்சியின் சைக்கிள்தான் முன்னணியில் இருக்கிறது.
அகிலேஷ் வேலைவாய்ப்பை உருவாக்குவேன் என்று வாக்குறுதி அளித்திருக்கிறார். நான் ஏன் சைக்கிளுக்கு வாக்களிக்கக் கூடாது?”
ரன்வீர்: “மாயவதிக்கு கணிசமான தொகுதிகள் கிடைத்தால் அமைச்சரவை அமைப்பதிலும், பஹுஜன்களுக்கு ஆதரவான கொள்கைகளை வகுப்பதிலும் அவர் பிஜேபிக்கு கட்டளையிட முடியும்.”
கடைசி இரண்டு கட்ட வாக்குப் பதிவின் போது அமித் ஷா: “பெஹன்ஜியின் வலிமையைப் பாராட்ட வேண்டும்.”
பதிலுக்கு மாயவதி: “எங்கள் வலிமையைப் பாரட்டுவது அமித் ஷாஜியின் உயர்ந்த உள்ளத்தைக் காட்டுகிறது.”
தேர்தல் களத்தில் நான் சுற்றுப்பயணம் செய்த போது இப்ராஹிம்பூர் என்கிற கிராமத்தில் நடந்த உரையாடல் இது. 2017இல் 22.2 ஆக இருந்த பிஸ்பியின் வாக்கு சதவீதம் தற்போது 12.88 ஆக வீழ்ந்திருக்கிறது.
பிஜேபியின் வாக்கு சதவீதம் 40.5இலிருந்து 45 ஆக உயர்ந்திருக்கிறது (4.5 சதவீதப் புள்ளிகள்)
எஸ்.பியின் வாக்கு சதவீதம் 21இலிருந்து 36.5 ஆக உயர்ந்திருக்கிறது.
பிஜேபியின் வெற்றிக்கு முக்கியக் காரணங்கள்: ‘
1. பிஎஸ்பியின் ஜாத்தவ் வாக்குகள் பிஜேபிக்கு மாற்றப் பட்டிருக்கிறது
2. தேர்தலுக்கு சற்று முன் 56000 கோடி மதிப்புள்ள ரேஷன் மக்களுக்குக் கொடுக்கப்பட்டது
3. 2.5 கோடி பேருக்கு ரூ 6000 மூன்று தவணைகளாக நேரடியாக வங்கிக் கணக்கில் போடப் பட்டிருக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக