வியாழன், 17 மார்ச், 2022

ஒரே நாளில் தென்கொரியாவில் 6 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா.. என்ன காரணம்?

 Shyamsundar   -  Oneindia Tamil  :  உலகம் முழுக்க கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முக்கியமாக தென் கொரியாவிலும், சீனாவிலும் தினசரி கொரோனா கேஸ்கள் புதிய உச்சம் தொட்டுள்ளது.
உலகம் முழுக்க இதுவரை 463,206,379 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 6,079,978 பேர் இதுவரை கொரோனா காரணமாக உலகம் முழுக்க பலியாகி உள்ளனர்.
396,173,081 பேர் இதுவரை கொரோனாவில் இருந்து குணமடைந்து உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் உலகம் முழுக்க 1,641,176 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இப்போதைக்கு முடியாது போல.. இஸ்ரேலில் பரவும் புதிய வகை கொரோனா.. விமான நிலையத்தில் 2 பேருக்கு உறுதி.! இப்போதைக்கு முடியாது போல.. இஸ்ரேலில் பரவும் புதிய வகை கொரோனா.. விமான நிலையத்தில் 2 பேருக்கு உறுதி.!

கடந்த 24 மணி நேரத்தில் 5,086 பேர் பலியாகி உள்ளனர். உலகம் முழுக்க 60,953,320 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். தென் கொரியாவில் ஒரே நாளில் 621,328 பேருக்கு கொரோனா பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று முதல்நாள் அங்கு 4 லட்சத்திற்கும் அதிகமான கேஸ்கள் பதிவானது. கடந்த 24 மணி நேரத்தில் தென் கொரியாவில் 6 லட்சத்திற்கும் அதிகமான கேஸ்கள் பதிவாகி உள்ளது. தென் கொரியாவில் கொரோனா கேஸ்கள் வேகமாக உயர்ந்து வருகிறது.

கொரோனா தோன்றியதில் இருந்து தென் கொரியாவில் பதிவான மிக அதிகமான கொரோனா கேஸ்கள் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. அங்கு மொத்த கொரோனா கேஸ்களின் எண்ணிக்கை 8,250,592 ஆக உள்ளது. இதில் ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 18 லட்சத்தை தொட்டுள்ளது. கடந்த மார்ச் 9ம் தேதியில் இருந்து தென் கொரியாவில் தினசரி கேஸ்கள் 3 லட்சத்திற்கும் அதிகமாக பதிவாகி வருகிறது. ஸ்டெல்த் ஓமிக்ரான் காரணமாக அங்கு இவ்வளவு கேஸ்கள் பதிவாகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இது கொரோனா வைரஸின் உட்பிரிவு ஆகும். ஓமிக்ரானில் மொத்தமாக மூன்று உட்பிரிவு உள்ளது. அவை BA.1, BA.2, மற்றும் BA.3. இதில் BA.1தான் முன்னர் பரவி வந்தது. BA.1 வகை ஓமிக்ரான்தான் முதலில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பரவியது. ஓமிக்ரான் BA.2 என்பதுதான் ஸ்டெல்த் ஓமிக்ரான் ஆகும். இதை ஆர்டிபிசிஆர் சோதனையில் கண்டுபிடிக்க முடியாது என்பதால் அதை ஸ்டெல்த் ஓமிக்ரான் என்கிறார்கள்.

நேற்று அதிகபட்சமாக ஜெர்மனியில் 275,807 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. பிரான்சில் 108,832 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. யுகேவில் 91,345 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இத்தாலியில் 72568 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. சீனாவில் தினசரி கேஸ்கள் 5 ஆயிரத்தில் இருந்து குறைந்துள்ளது. நேற்று வெறும் 1,952 பேருக்கு மட்டுமே அங்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக