வியாழன், 24 மார்ச், 2022

ரஷிய அதிபர் புதினுக்கு ரூ.15 லட்சம் கோடி சொத்து- 58 ஹெலிகாப்டர்கள், விமானங்களும் உள்ளன

 மாலைமலர் : ரஷிய அதிபர் புதின் தற்போது உலகத்தின் கவனத்தை ஈர்த்து வரும் நிலையில் அவரது சொத்துக்களின் மதிப்பு அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கிறது.
உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்திவரும் நிலையில் ரஷிய அதிபர் விளாடி மிர் புதின் உலக அளவில் அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளார்.
விளாடிமிர் புதின் 1952-ம் ஆண்டு ரஷியாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் பிறந்தார். 1975-ம் ஆண்டு ரஷியாவின் உளவு நிறுவனமான கே.ஜி.பி.யில் பணியில் சேர்ந்தார். ஆனால் அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் குடும்பத்தினர் குறித்தும் இதுவரை வெளிப்படையான தகவல்கள் எதையும் தேரிவித்ததில்லை.
இந்த நிலையில் ஹெர் மிட்டேஜ் கேப்பிட்டல் மேனேஜ்மெண்ட் என்ற சொத்துக்களை மதிப்பிடும் நிறுவனம் புதினுக்கு 200 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு சொத்துக்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இதன் இந்திய பணத்தின் மதிப்பு ரூ.15 லட்சம் கோடி ஆகும்.

இதுதொடர்பாக அந்த நிறுவனம் கூறியதகவல்கள் வருமாறு:-

ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுக்கு ரூ.15 லட்சம் கோடி மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன. இவர் உலகின் 6-வது பணக்கார மனிதர் ஆவார்.

புதினுக்கு சொந்தமாக 700 கார்கள் உள்ளன. பல ஜெட் விமானங்களையும் வைத்துள்ளார். அவரிடம் 58 ஹெலிகாப்டர்கள், விமானங்கள் உள்ளன. மேலும் அவரிடம் பறக்கும் கிரெம்ளின் என்ற பெயரில் சொகுசு விமானமும் உள்ளது.

இந்த விமானத்தில் அதி நவீன சொகுசு வசதிகள் உள்ளன. இதில் கழிப்பறைகளின் தங்க முலாம் பூசப்பட்டுள்ளது. மேலும் இத்தாலியில் 6 மாடி கொண்ட அதிநவீன சொகுசு படகும் உள்ளது.
மேலும் புதினின் கைக்கடிகாரங்களின் மதிப்பு மட்டும் ரூ.5.35 கோடி ஆகும். பட்டேக் பிலிப்ஸ், லாஞ்ச் அன்ட் சோஹ்னே டவுபோ கிராப் உள்பட பல வகையான கைக்கடிகாரங்கள் உள்ளன.

மேலும் பல ரகசிய அரண்மனைகளும் புதினிடம் உள்ளன. கருங்கடலுக்கு மிக அருகே 1 லட்சத்து 90 ஆயிரம் சதுரஅடி பரப்பளவில் அமைந்துள்ள சொகுசு பங்களாவும் அவருக்கு சொந்தமாக உள்ளது.

இவ்வாறு அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

ரஷிய அதிபர் புதின் தற்போது உலகத்தின் கவனத்தை ஈர்த்து வரும் நிலையில் அவரது சொத்துக்களின் மதிப்பு அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கிறது.

இதையும் படியுங்கள்...ரூ.7500 கோடி கடனுதவி: எதிர்காலத்திலும் இந்தியா நல்லுறவை நல்கும் என நம்புகிறோம்- இலங்கை பிரதமர் ராஜபக்சே
Related Tags :

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக