ஞாயிறு, 13 பிப்ரவரி, 2022

பெரியார் பெயரை தங்கள் பெயராக போட்டுக்கொள்ளலாமா? ( உ+ம் பெரியார் சரவணன்)

Loganayaki Lona :  பெரியார் என்பது பெரியாருக்கே பெயர் கிடையாதே.
அது தங்களை மேம்படுத்தும் சிந்தனை கொண்ட மாமனிதராம் ஈ.வெ.ராமசாமிக்கு  பெண்கள் அங்கீகரித்துக் கொடுத்த பட்டம்  தானே.
அவர்க்கு முன்பாகவும், இணையாகவும் அவர் போன்ற உயர்ந்த  சிந்தனை கொண்டவர் தென்னாட்டில் இல்லாததால் அவர் பெரியார் ஆக்கப்பட்டார்.எங்கள் தந்தைக்கு ,தலைவனுக்கு  அரசியல் பெண்கள் கொடுத்த பொதுவாழ்வுக்கான சமூக   அங்கீகாரம் அது.
அடுத்தவர் பட்டத்தை திருடி தாங்கள் போடுவது சரியா?.
நான் டாக்டர் என எப்படி போட்டுக்கொள்ள முடியாதோ அது போல் நான் பெரியார் என  போட்டுக்கொள்ள பெரியாரிச அரசியலில் ஏன்  தடை இல்லை?
பெரியாரிய இயக்கங்கள் பெரியாரிஸ்டுகள் இவ்வாறு தாங்களே  பெயர் சூட்டிக்கொண்டு பொதுவாழ்வில் அவர் பெயரை கெடுக்க அனுமதிக்க கூடாது.
லோகநாயகி .(பெரியார் இல்லை.பெரியாரிஸ்ட்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக