ஞாயிறு, 13 பிப்ரவரி, 2022

தனுஷ் ஐஸ்வர்யா இனியும் ஒன்றாக இருக்க முடியாது என்ற முடிவில்? சோகத்தில் ரஜினி

tamil.samayam.com : தனுஷும், ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் மீண்டும் சேர்வார்களா என்பது பற்றி புது தகவல் வெளியாகியிருக்கிறது.
தனுஷும், ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இந்நிலையில் திருமணமாகி 18 ஆண்டுகள் கழித்து பிரிந்துவிட்டனர். அவர்களை சேர்த்து வைக்க தொடர்ந்து முயற்சி நடந்து வருகிறது.
தனுஷ், ஐஸ்வர்யா பிரிவு: வெளியான 'திடுக்' தகவல்
தனுஷுக்கும், ஐஸ்வர்யாவுக்கும் இடையே 6 ஆண்டுகளாக பிரச்சனையாக இருந்தது. அவர்கள் அப்பொழுதே பிரியாமல் இருந்தது ஆச்சரியமாக இருக்கிறதே, தவிர தற்போது பிரிந்திருப்பது ஆச்சரியம் இல்லை என்று கோடம்பாக்கத்தில் தெரிவித்துள்ளனர்.


பிரச்சனை பெரிதாகி ஒரு கட்டத்தில் அவர்கள் ஒரே வீட்டில் இருந்தாலும் கணவன், மனைவியாகே இல்லையாம். அப்படி எதற்கு வாழ வேண்டும் என்று தான் பிரிந்துவிட்டார்களாம். வேறு வழியே இல்லாமல் தான் பிரிவு எனும் கடைசி அஸ்திரத்தை கையில் எடுத்தார்களாம்.

இப்படி பல ஆண்டுகளாக பிரச்சனையோடு இருந்த தனுஷும், ஐஸ்வர்யாவும் மீண்டும் சேர வாய்ப்பே இல்லை என்று பேச்சு கிளம்பியிருக்கிறது.

தனுஷ், ஐஸ்வர்யாவின் முடிவால் ரஜினி தான் அதிர்ச்சியிலும், வேதனையிலும் இருக்கிறாராம். பிள்ளைகளை நினைத்துப் பாருங்கள். அவர்கள் நலனுக்காக ஒன்று சேருங்கள் என்று தனுஷ், ஐஸ்வர்யாவிடம் கூறி வருகிறாராம்.
6 ஆண்டுகளாக பொறுத்துப் போயாச்சு, இனியும் முடியாது என்கிற முடிவில் தனுஷும், ஐஸ்வர்யாவும் இருக்கிறார்களாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக