வெள்ளி, 18 பிப்ரவரி, 2022

முன்னாள் அமைச்சர் வேலுமணி உட்பட அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கைது.. கோவையில் ..

 மாலைமலர் : வெளியூர் ஆட்களை மாவட்டத்தை விட்டு உடனடியாக வெளியேற்ற வேண்டும், தேர்தலை நியாயமான முறையில் நடத்த வேண்டும் என அதிமுக எம்எல்ஏக்கள் முழக்கமிட்டனர்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நியாயமான முறையில் நடத்த வலியுறுத்தி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கோவை கலெக்டர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  கலெக்டர் அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


அ.தி.மு.க.வினர் மீது பொய் வழக்கு போடுவதை கண்டிப்பதாகவும், வெளியூர் ஆட்களை மாவட்டத்தை விட்டு உடனடியாக வெளியேற்ற வேண்டும், தேர்தலை நியாயமான முறையில் நடத்த வேண்டும், தி.மு.க.வுக்கு துணை போகும் அதிகாரிகளை மாற்ற வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்.
இதையடுத்து அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போராட்டம் நடத்திய அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கலைந்துசெல்ல மறுத்தனர். இதனால் எம்எல்ஏக்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. எம்எல்ஏக்கள் தரையில் படுத்துக்கொண்டு ஆர்ப்பாட்டத்தை கைவிட மறுத்தனர். இதையடுத்து முன்னாள் அமைச்சர் வேலுமணி உட்பட அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கைது செய்யப்பட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக