திங்கள், 28 பிப்ரவரி, 2022

பள்ளி மாணவியை போதைக்கு அடிமையாக்கி கூட்டு பலாத்காரம் செய்த மருத்துவ மாணவர்கள் சென்னை

பள்ளி மாணவியை போதைக்கு அடிமையாக்கி கூட்டு பலாத்காரம் செய்த மருத்துவ மாணவர்

மாலைமலர் : போரூர்: போதைப்பொருள் கொடுத்து மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த காதலன் வசந்த்கிரிஷ், சதீஷ்குமார், பிரசன்னா, விஷால் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் சமீப காலமாக அதிகரித்து வருகிறது.
பெண் குழந்தைகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் தங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் குறித்து உடனடியாக பெற்றோரிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் போலீசார் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் விருகம்பாக்கத்தில் பள்ளி மாணவியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி மருத்துவ மாணவர் ஒருவர் தனது நண்பர்களுக்கும் விருந்தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


பரபரப்பான இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

விருகம்பாக்கம் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி ராமாபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இவர் பள்ளி அருகே உள்ள பானிபூரி கடைக்கு அடிக்கடி செல்வது வழக்கம். அப்போது ராமாபுரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி தனியார் கல்லூரியில் பல் மருத்துவம் 2-ம் ஆண்டு படித்து வரும் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த வசந்த்கிரிஷ் (20) என்பவருடன் மாணவிக்கு பழக்கம் ஏற்பட்டது.

இருவரும் அடிக்கடி சந்தித்து வந்தனர். அப்போது வசந்த்கிரிஷ் மாணவியிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறினார். இதனை நம்பிய மாணவி காதலன் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்தார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மாணவி உடல் ரீதியாக சோர்வாக இருந்தார். இதுபற்றி பெற்றோர் விசாரித்த போது மகள் போதைப்பொருள் பழக்கத்துக்கு அடிமையாகி இருப்பதும், மருத்துவ மாணவர் வசந்த்கிரிசை காதலிப்பதும் தெரிந்தது.

மேலும் வசந்த்கிரிஷ் மற்றும் அவரது நண்பர்கள் மாணவிக்கு போதைப் பொருள் கொடுத்து கூட்டாக பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதும் தெரிந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் இது குறித்து வடபழனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

உதவி கமி‌ஷனர் பாலமுருகன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் பிரவீன் ராஜேஷ், ஏட்டு வெங்கடப்பன், ஞானசேகர், அசோக்குமார் போலீஸ்காரர் கிஷோர் ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது மாணவியின் காதலன் வசந்த்கிரிஷ் மற்றும் அவரது நண்பர்களான சினிமா துணை நடிகர் சதீஷ் குமார் என்கிற பாலசிவாஜி, நங்கநல்லூர் பகுதியை சேர்ந்த தனியார் பல் மருத்துவ கல்லூரியில் பகுதிநேர பேராசிரியர் ஆன பிரசன்னா, கோடம்பாக்கத்தை சேர்ந்த கல்லூரி மாணவரான விஷால் ஆகிய 4 பேரும் சேர்ந்து கடந்த ஒரு மாதமாக மாணவியை வரவழைத்து உல்லாசம் அனுபவித்து வந்தது தெரியவந்தது.

ஆரம்பத்தில் காதலன் வசந்த்கிரிஷ் தங்கி உள்ள வீட்டுக்கு மாணவி சென்ற போது அவருக்கு ஹூக்கா போதைப்பொருள் கொடுத்துள்ளார்.

இதனை தொடர்ந்து கொடுத்து போதைக்கு அடிமையான பின்னர் மாணவியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.

இதுபற்றி வசந்த் கிரிஷ் தனது நண்பர்களான சதீஷ் குமார், பிரசன்னா, விஷால் ஆகியோரி டம் தெரிவித்தார்.

இதையடுத்து அவர்களும் மாணவியை வரவழைத்து போதைப்பொருள் கொடுத்து பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வசந்த்கிரிசுடன் காதல் ஏற்பட்டதும் அவரது நண்பர்களுடன் மாணவி நெருக்கமாக பழகி உள்ளார்.

இதனை சாதகமாக பயன்படுத்தி மாணவியை அனைவரும் கூட்டு சேர்ந்து சீரழித்துள்ளனர். ஒரு மாதத்துக்கு மேலாக மாணவியை வசந்த் கிரிஷ் நண்பர்களுக்கு விருந்தாக்கி உள்ளார். வெளியில் சொல்ல முடியாமல் மாணவி பாலியல் வேதனையை அனுபவித்து வந்துள்ளார்.

மாணவி உடல் ரீதியாக பாதிக்கப்பட்ட பின்னரே பெற்றோருக்கு இதுபற்றி தெரியவந்துள்ளது.

இதையடுத்து போதைப்பொருள் கொடுத்து மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த காதலன் வசந்த்கிரிஷ், சதீஷ்குமார், பிரசன்னா, விஷால் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

அவர்கள் மாணவியுடன் நெருக்கமாக உள்ள வீடியோக்களை செல்போன்களில் எடுத்து வைத்துள்ளனரா? என்று ஆய்வு செய்து வருகிறார்கள். அனைவரது செல்போன்களிலும் மாணவியுடன் நெருக்கமாக உள்ள புகைப்படம் இருந்தது.

கைதான 4 பேரிடமும் இதுபற்றியும் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக